Tuesday, December 10

அம்ருதாஞ்சன் ஹெல்த்கேர் நிறுவனத்தின் புதிய பிரச்சாரம்

அம்ருதாஞ்சன் ஹெல்த்கேர் நிறுவனத்தின் புதிய பிரச்சாரம் அனுதின இரக்ககுணத்தின் செயல்களை கௌரவிக்கிறது

யூடியூப் இணைப்பு:  https://youtu.be/sFwgON0QDmM ; https://youtu.be/n0KPn-hEX

சென்னை, ’XX, 24:பெரும்பாலும் பரபரப்பு மற்றும் மன அழுத்தத்தை உணரக்கூடிய ஒரு உலகில், பல தலைமுறைகளாக வலி மேலாண்மையில் ஒரு நம்பகமான நிறுவனமான அம்ருதாஞ்சன், எளிய இரக்க செயல்களின் ஆற்றலை நமக்கு நினைவூட்டுகின்றது. நம்மிடையே வாழும் தம்மை வெளிப்படுத்தாத மாவீரர்களாகிய அவர்களை நாம் அனைவரும் கவனித்திருக்கிறோம். அவர்கள் மற்றவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த தன்னலமின்றி கூடுதல் முயற்சி செய்பவர்கள்.

இந்த சிறிய கருணை செயல்கள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகும் அதே வேளையில், அம்ருதாஞ்சன் ஹெல்த்கேர் தனது இதயப்பூர்வமான புதிய பிரச்சாரமான “டார்ட் ஹம் சம்பல்லேங்கே” “Dard Hum SambhalLenge” மூலம் தினசரி வெற்றியாளர்களின் மீது கவனத்தை செலுத்துகிறது. இந்த பிரச்சாரமானது, நமது சமூகங்களில் ஏற்படுத்தக்கூடிய அனைத்து நேர்மறையான விளைவுகளையும் நமக்கு நினைப்பூட்டுகின்ற –  (நினைவூட்டுகின்ற) வகையில், மற்றவர்களுக்கு உதவுவதற்காக தங்கள் சொந்த அசௌகரியங்களை பாராதவர்களைக் கொண்டாடுகிறது. இந்த பிரச்சாரம், மக்கள் தங்கள் சிந்தனை முயற்சிகளை தொடர அனுமதிக்கின்ற அக்கறை காட்டும் சிறிய செயல்களை முக்கியப்படுத்துகிறது மற்றும் பயனுள்ள வலி நிவாரணத்தை வழங்கும் அம்ருதாஞ்சன் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இந்த புதிய TVC கள், சாதாரண மக்கள், உடல் அசௌகரியங்களை எதிர்கொண்டாலும், மற்றவர்களுக்கு உதவ தங்கள் வழியை விட்டு மேலேயும் அதற்கு அப்பாலும் செல்லும் சூழ்நிலைகளை காட்சிப்படுத்துகின்றன. இலவச கண் சிகிச்சை முகாமில் ஒரு வயதான அண்டை வீட்டுக்காரருக்காக  ஒரு பெண் வரிசையில் ஒரு இடத்தைப் பிடிக்கின்றது மற்றும் ஒரு இளம் மாணவர் உரிமையாளருக்காக ஒரு பரபரப்பான தேநீர் கடையை நிர்வகிக்கின்றது போன்ற தொடர்புடைய காட்சிகளை இது சித்தரிக்கிறது. இந்த விசாலமான மனது கொண்ட நபர்கள் சோர்வாக உணரத் தொடங்கும் போது, அம்ருதாஞ்சன் அதன் நம்பகமான வலி நிவாரண தீர்வுகளுடன் உள் வருகிறது. இந்தத்

தயாரிப்புகள் தினசரி வீரர்களுக்கு ஒரு நேரத்தில் ஒரு செயலாக இரக்கத்தைத் தொடர்ந்து காண்பிக்க எப்படி உதவுகின்றன என்பதை இந்தப் பிரச்சாரம் நேர்த்தியாகக் காட்டுகிறது.

அம்ருதாஞ்சன் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. S சம்பு பிரசாத் பேசுகையில், “ஒவ்வொரு நாளும், சாதாரண மனிதர்கள் தன்னலமற்ற அசாதாரணமான செயல்களைச் செய்கிறார்கள் மற்றும் நம் சமூகத்தின் புகழப்படாத வீரர்களாக இருக்கிறார்கள், அவர்கள் பெரும்பாலும் அடையாளம் காணப்படாமல் போகிறார்கள்.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, அம்ருதாஞ்சன் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத் துறையில் ஒரு நம்பகமான பிராண்டாக இருந்து வருகிறது. எங்கள் கவனம் எப்போதும் வணிகப் பொருட்களைத் தாண்டி நீண்டுள்ளது. எங்களின் உண்மையான சாராம்சம் எங்களை வரையறுக்கின்ற மற்றும் வலிமை மற்றும் நம்பிக்கையை வழங்கும் மனித தொடர்புகளில் உள்ளது.

“டார்ட் ஹம் சம்பல்லெங்கே” “Dard Hum SambhalLenge” பிரச்சாரத்தின் மூலம், அவர்களின் அர்ப்பணிப்பை நாங்கள் கௌரவிக்கிறோம் மற்றும் பயனுள்ள வலி நிவாரண தீர்வுகளுடன் அவர்களுக்கு ஆதரவளிக்கிறோம். அவர்களின் தன்னலமற்ற தன்மை எங்களை ஊக்குவிக்கிறது, மேலும் வரம்புகள் இல்லாமல் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த அவர்களுக்கு அதிகாரம் அளிக்கின்ற வகையில் அவர்களின் தாராளமான பணியைத் தொடர உதவுவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.”என்று கூறினார்.

அம்ருதாஞ்சன் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி திரு.மணி பகவதீஸ்வரன் மேலும் தெரிவிக்கையில், “எங்கள் புதிய பிரச்சாரம், ஒரு வேதனையில்லாத , சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு அம்ருதாஞ்சனின் ஆதரவைப் பிரதிபலிக்கின்ற வகையில், மற்றவர்களுக்கு உதவுவதில் அசௌகரியங்களைத் தாங்கும் அந்த தன்னலமற்ற வீரர்களை கெரவிக்கிறது – கௌரவிக்கிறது.” என்று கூறினார்.

மக்கள் உணர்வுப்பூர்வமாக தொலைவில் இருப்பதாக உணரும் இக்காலத்தில், அம்ருதாஞ்சனின் “தர்த் ஹம் சம்பல்லேங்கே”  “Dard Hum SambhalLenge” பிரச்சாரம், கருணையின் ஆற்றலை இதயப்பூர்வமாக நினைவூட்டுகிற ஒன்றாக இருக்கிறது. சிறியதாக இருந்தாலும்,

நம்முடைய சொந்த தேவைகளை விட மற்றவர்களின் தேவைகளை முன்வைக்கவும், மற்றவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் இது நமக்கு நினைவூட்டுகிறது. இரக்ககுணத்தின் ஒவ்வொரு  செயலும் மற்றும் வலி நிவாரணத்தின் ஒரு தொடுதலும் உலகில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.