Thursday, October 10

இடி மின்னல் காதல் திரை விமர்சனம்

இடி மின்னல் காதல் திரைவிமர்சனம்

Casting : Ciby, Bhavya Trikha, Yasmin Ponnappa, Radha Ravi, Balaji Shaktivel, Jagan, Jayadithya, Vincent Nakul Manoj Mullath

Directed By : Balaji Madhavan

Music By : Sam CS

Produced By : Jayachander Pinnamneni, Balaji Madhavan

அமெரிக்காவுக்கு செல்ல இருக்கும் நாயகன் சிபி, அதற்கு முன்பாக தனது காதலி பவ்யா யுடன் காரில் ஜாலியாக வலம் வந்து கொண்டிருக்கும்போது , திடீரென்று குறுக்கே வருபவர் மீது மோதி விடுகிறார். இந்த விபத்தில் அந்த நபர் உயிரிழந்துவிடுகிறார். தெரியாமல் நடந்த விபத்து என்றாலும், தன்னால் ஒரு உயிர் பலியானதை நினைத்து சிபி வருத்தப்படுகிறார். அதே சமயத்தில் அவருடைய காதலி அவர் அமெரிக்கா செல்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்.

இதற்கிடையே, உயிரிழந்த நபரின் மகன் ஆதித்யா தனது அப்பா இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார். அவருக்கு பாலியல் தொழிலாளி யாஷ்மின் பொன்னப்பா ஆதரவாக இருக்கிறார். ஆதித்யாவின் அப்பா வாங்கிய கடனுக்காக அவருடைய மகன் ஆதித்யாவை வில்லன் அழைத்துச் செல்ல முயற்சிக்கிறார்.

இந்த இரண்டு கதைகளும் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரே நேர்கோட்டில் நிகழ்கிறது. தன்னால் உயிரிழந்தவரின் மகன் தான் ஆதித்யா என்பது தெரியாமலேயே, அவரை காப்பாற்றும் முயற்சியில் நாயகன் சிபி ஈடுபடுகிறார். ஆனால், தனது தந்தை இறந்ததற்கு காரணம் சிபி தான் என்பதை தெரிந்துக்கொள்ளும் சிறுவன் ஆதித்யா, சிபி மீது கொலை வெறிக்கொள்ள, அதனால் எப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை சொல்வது தான் ’இடி மின்னல் காதல்’ படத்தின் கதை…

நாயகனாக நடித்திருக்கும் சிபிக்கு, இக்கதையில் உளவியல் மருத்துவராக வரும் கதா பாத்திரம்… ஆனால் உளவியல் மருத்துவருக்கு உரிய தோற்றம் அவருக்கு சற்றும் பொருந்தவில்லை.. அதேபோல் ஆக்‌ஷன் நாயகனுக்கான அனைத்து தகுதிகளும் இருப்பதாக காட்டுகிறார்கள்.ஆனால், கிளைமாக்ஸ் காட்சியில் அவரை அடி வாங்குபவராக காட்டுகிறார்கள். இப்படி முன்னுக்குப் பின் கதாபாத்திர வடிவமைப்பில் இயக்குனருக்கு பல குழப்பம்…?கதாநாயகனின் கதாபாத்திர வடிவமைப்பில் இயக்குனர் தோற்றுப் போய் விடுகிறார்…

நாயகியாக நடித்திருக்கும் பவ்யா ட்ரிகா வின் நடிப்பு சிறப்பு… திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் அவருடைய கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டு உள்ளது..வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் வின்செண்ட் நகுல் கதாபாத்திரம் ஓவர் பில்டப்… எப்ப பாத்தாலும் குரங்கு மாதிரி மேலே ஏறி உட்கார்ந்து இருக்கிறார்.. வில்லனா இல்ல குரங்கான்ட்டு டவுட்டா இருக்கு….

சிறுவன் ஆதித்யா அப்பா இறந்த துக்கத்தை தாங்காமல் மன ரீதியாக பாதிக்கப்பட்டு தடுமாறும் காட்சிகள் சிறப்பாக உள்ளது. அதிலும், தனது அப்பாவின் மரணத்திற்கு சிபி தான் காரணம் என்றதுமே அவர் மீது கொலை வெறிக்கொண்டு அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள் எல்லாம் சிறப்பு…பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் யாஷ்மின் பொன்னப்பா கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.

கிறிஸ்தவ பாதிரியராக ராதாரவி, போலீஸ் கான்ஸ்டபிளாக பாலாஜி சக்திவேல்,இருவரும் தங்களது அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் படத்திற்கு பெரும் பலம் சேர்த்து இருக்கிறார்கள்…வழக்கம்போல ஜெகனுக்கு இப்படத்திலும் வந்து போகுபவராக இருக்கிறார் … சிறுவன் ஆதித்யாவின் தந்தையாக நடித்திருக்கும் மனோஜ் முல்லத், ஊதாரித்தனத்தால் சொத்து, குடும்பம் என அனைத்தையும் இழந்து தவிக்கும் கதாபாத்திரத்தில நடித்திருக்கிறார். நடிப்பு பெரிதாக இல்லை….

ஜெயசந்தர் அவர்களின் ஒளிப்பதிவு சுமார்… சாம்.சி.எஸ் பின்னணி இசை எல்லாம் உணர்வுபூர்வமாக இல்லை… எல்லா திரைப்படத்திற்கும் பின்னணி இசை என்பது மிகவும் முக்கியம்… அதுவும் ஒரு திரில்லர் சப்ஜெக்ட் படத்திற்கு பின்னணி இசை என்பது மிகப்பெரிய தூண்…. இதில் மிகப்பெரிய கோட்டை விட்டிருக்கிறார்கள்….

எதிர்பாராமல் நடக்கும் ஒரு விபத்தை வைத்துக்கொண்டு, பலவிதமான கதாபாத்திரங்களின் வடிவமைப்போடு இயக்குநர் பாலாஜி மாதவன் அமைத்திருக்கும் திரைக்கதை சுவாரஸ்யமாக இருந்தாலும், பல இடங்களில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல் பல கதாபாத்திரங்களை பலவீனமான முறையில் வடிவமைத்த விதம், அதில் நடித்த நடிகர் ஆகியவை படத்திற்கு பெரும் குறையாக அமைந்து படத்தின் தன்மையை கெடுத்து விட்டது என்றே கூறலாம்…

மொத்தத்தில் தலைப்பில் மட்டுமே இடி மின்னல் காதல்….

RATING : 2/5

MOVIEW REVIEW  BY CNN OTV TEAM