Monday, November 11

(இந்தியா) தமிழ்நாடு பிரிவு சார்பில் 2500 + செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று உலக சாதனை

கிளெனீகல்ஸ் ஹாஸ்பிடல் சென்னை –
செவிலியர் நிர்வாகிகள் சங்கம் (இந்தியா) தமிழ்நாடு பிரிவு சார்பில்
2500 + செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று உலக சாதனை

ஐன்ஸ்டீன் உலக சாதனை நிறுவனம் அங்கீகரிப்பு ~
———
சென்னை, ஆக. 18- 2024: சென்னையில் உள்ள கிளெனீகல்ஸ் ஹாஸ்பிடல், செவிலியர் நிர்வாகிகள் சங்கம் (இந்தியா) தமிழ்நாடு பிரிவு உடன் இணைந்து புதிய உலக சாதனை படைக்கும் வகையில் செவிலியர் தினத்தில் 2500+ செவிலியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியை மிகப்பிரமாண்டமாக நடத்தியது. இது ஐன்ஸ்டீன் உலக சாதனை நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலர் டாக்டர் ஜே ராதாகிருஷ்ணன் மற்றும் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் செவிலியர்கள் ஒன்று கூடி “செவிலியர்களாகிய நாங்கள் நமது எதிர்காலம் மற்றும் சரியான கவனிப்பின் மூலம் பொருளாதார சக்தியாக இருப்போம்” என்று உறுதிமொழியை ஏற்றனர்.

உலகெங்கிலும் உள்ள மருத்துவமனைகளின் முதுகெலும்பாக விளங்கும் செவிலியர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, கவனிப்பு மற்றும் சேவையை போற்றும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது. நோயாளிகளின் பராமரிப்பில் மட்டுமின்றி, சுகாதாரப் பொருளாதாரத்தை முன்னேற்றுவதிலும் செவிலியர்கள் வகிக்கும் முக்கியப் பங்கை எடுத்துக்காட்டும் வகையில் இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ‘‘செவிலியர்களாகிய நாங்கள் நமது எதிர்காலம் மற்றும் சரியான கவனிப்பின் மூலம் பொருளாதார சக்தியாக இருப்போம்” என்பதை வலியுறுத்தியது.
சர்வதேச செவிலியர் தினத்தின் ஒரு பகுதியாக, சமூகங்களின் நல்வாழ்வை உறுதி செய்வதில் அவர்களின் முக்கிய பங்கை வலியுறுத்தி, செவிலியர்களின் பொருளாதார மற்றும் சமூக பங்களிப்புகளில் கவனம் செலுத்துவதை இந்த நிகழ்ச்சி முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த உலக சாதனையை ஐன்ஸ்டீன் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்துள்ளது.

இது குறித்து கிளெனீகல்ஸ் ஹாஸ்பிடல் சென்னையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் நாகேஸ்வர ராவ் கூறுகையில், இந்த நிகழ்ச்சி செவிலியர்களை கவுரவிப்பது மட்டுமல்ல, அவர்கள் மேற்கொண்டு வரும் அயராத முயற்சிகளை பாராட்டி நன்றி தெரிவித்து அதை அங்கீகரிப்பதாகும். இந்த உலக சாதனையை முயற்சிப்பதன் மூலம், செவிலியர்களை கவுரவிக்க விரும்புகிறோம், மேலும் உள்நாட்டிலும் உலக அளவிலும் எதிர்கால சுகாதாரப் பாதுகாப்பில் அவர்கள் வகிக்கும் முக்கிய பங்கை முன்னிலைப்படுத்த விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.
இந்த உலக சாதனை நிகழ்ச்சியின் மூலம், உலக அளவில் சுகாதார அமைப்புகளில் அவர்கள் ஆற்றிவரும் பணியை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் எடுத்துக் கூறியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
For Further Information, please contact: Udaya Kumar @ 9940637802