Thursday, October 10

‘என் இசை கோர்ப்பு, அப்பாவின் புகழ் சேர்ப்பு’ என்கிறார் இசையமைப்பாளர் தஷிரெங்கராஜ்!

‘என் இசை கோர்ப்பு, அப்பாவின் புகழ் சேர்ப்பு’ என்கிறார் இசையமைப்பாளர் தஷிரெங்கராஜ்!

மறைந்த இசையமைப்பாளர் தஷி அவர்களின் மகன் தஷிரெங்கராஜ்,
“ப்ரீத்திய ஹுச்சா”
என்ற கன்னட படத்திற்கு இசை அமைத்துள்ளார். அதன் முதல் பாடல் இணையத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சிவராஜ்குமார் உறவினரான டி.கௌரி குமார் தயாரித்துள்ள இந்த கன்னடப் படத்தில் விஜய், குன்கும், பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். சத்யா சாம்ராட் வரிகளில், எம்.கே.பாலாஜி, மாதங்கி அஜீத்குமார் பாடியுள்ளனர். வீ.குமார் இயக்கியுள்ளார்.

மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘பேப்பட்டி’ என்கின்ற படத்திற்கும், தமிழில் ‘பித்தள மாத்தி’ என்கின்ற படத்திற்கும் ஏற்கனவே பிண்ணனி இசை அமைத்துள்ளார்.தற்போது ‘எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்’ என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார் தஷிரெங்கராஜ்.