Saturday, October 5

குளோபல் ஸ்டார் ராம் சரணுடன் இணைந்த,  கர்நாடக சக்கரவர்த்தி சிவ ராஜ்குமார் !!

குளோபல் ஸ்டார் ராம் சரணுடன் இணைந்த,  கர்நாடக சக்கரவர்த்தி சிவ ராஜ்குமார் !!
குளோபல் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், புச்சி பாபு சனா, ஏ.ஆர்.ரஹ்மான், வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் இணையும் பான் இந்தியா திரைப்படமான #RC16 ல் கர்நாடக சக்கரவர்த்தி சிவ ராஜ்குமார் இணைந்துள்ளார்.
RRR இன் உலகளாவிய வெற்றி, முன்னணி நட்சத்திரமான ராம் சரணுக்கு உலகம் முழுவதும் பெரும் புகழை பெற்றுக் கொடுத்தது. உப்பேனா படத்தின் மூலம் பிளாக்பஸ்டர் அறிமுகமான பரபரப்பான இயக்குனர் புச்சி பாபு சனாவுடன் தனது 16வது படத்திற்காக ராம் சரண் இணைந்துள்ளார். இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் பெருமையுடன் வழங்க, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் பேனரின் கீழ் உயர்தர தொழில்நுட்பத்துடன், மிகப்பெரும் பட்ஜெட்டில், பெரிய கேன்வாஸில் #RC16 படத்தினை பிரமாண்ட திரைப்படமாக  தயாரிக்கிறார்கள்.
இந்த பான் இந்தியா திரைப்படத்தில் பல்வேறு மொழிகளைச் சார்ந்த  பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இடம்பெறுகிறார்கள். கர்நாடக சக்கரவர்த்தி சிவ ராஜ்குமார் தெலுங்கு திரையுலகிற்கு இப்படம் மூலம் வருகிறார், ஆம் கன்னட சூப்பர் ஸ்டார் இப்படத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், மேலும் இந்த செய்தி இன்று சிவ ராஜ்குமாரின் பிறந்தநாளின் சிறப்பு சந்தர்ப்பத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ராம்சரண் மற்றும் சிவராஜ்குமார் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு சூப்பர் ஸ்டார்களையும் ஒன்றாக திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
அகாடமி விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த பிரம்மாண்ட படத்திற்கு இசையமைக்கிறார், இதில் ராம் சரண் ஜோடியாக ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். ஆர் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.
படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள்.
நடிகர்கள்: ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார்
தொழில்நுட்பக் குழு: 
எழுத்து, இயக்கம்: புச்சி பாபு சனா வழங்குபவர்கள்: மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் 
பேனர்: விருத்தி சினிமாஸ் 
தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு இசையமைப்பாளர்: ஏஆர் ரஹ்மான் 
ஒளிப்பதிவு : ஆர் ரத்னவேலு 
தயாரிப்பு வடிவமைப்பு: அவினாஷ் கொல்லா
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ