Thursday, October 10

சமுத்திரக்கனியின் ராமம்ராகவம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக வெளியாகிறது

சமுத்திரக்கனியின் ராமம்ராகவம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக வெளியாகிறது.

நடிகர் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியான நடிகராக பல படங்கள் நடித்து வருகிறார். தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம்ராகவம் படம் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. இதில் சமுத்திரக்கனி அப்பாவாகவும் தன்ராஜ் மகனாகவும் நடித்திருக்கிறார்கள்.

அப்பா மகன் உறவை சொல்லும் படமாக , குடும்பத்தோடு கண்டுகளிக்கும் படமாக உருவாக்கப்பட்டிருக்கும் ராமம்ராகவம் படத்தின் கொலசாமிபோல பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சமீபத்தில் தெலுங்கு திரையுலகைசார்ந்த சிலர் ராமம்ராகவம் படத்தை பார்த்தவர்கள் சமுத்திரக்கனியையும் இயக்குனர் தன்ராஜையும் வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள்.

சமூகத்திற்கு அவசியமான அதே சமயம் கலகலப்பான குடும்ப காவியம் இந்த ராமம்ராகவம் என்று பாராட்டியிருக்கிறார்கள்.
இந்த படத்தின் கதை சிவபிரசாத் யானலா எழுதியிருக்கிறார்.
விரைவில் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக வெளியாக இருக்கிறது ராமம் ராகவம்.