Sunday, September 8

ஜேம்ஸ் கார்த்திக், இனியா, சோனியா அகர்வால் நடிக்கும் சமூகத்தின் ஏற்றத்தாழ்வை உரக்கப்பேசும்  சீரன் திரைப்படம்  விரைவில் வெளியாகிறது !!

ஜேம்ஸ் கார்த்திக், இனியா, சோனியா அகர்வால் நடிக்கும் சமூகத்தின் ஏற்றத்தாழ்வை உரக்கப்பேசும்  சீரன் திரைப்படம்  விரைவில் வெளியாகிறது !! 
ஜேம்ஸ் கார்த்திக், M.நியாஸ் தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் துரை K முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “சீரன்”. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளை உரக்கப்பேசும் ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் விரைவில் திரைக்கு வரவுள்ளது. 
தன் வாழ்வில் சந்தித்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில்,  இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார் ஜேம்ஸ் கார்த்திக். மேலும் இப்படத்தை தயாரித்து, நாயகனாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் துரை K முருகன் இப்படத்தை  இயக்கியுள்ளார். 
 நம் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை மையம் தான் கதை. ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட தம்பதியின் மகன் மறுக்கப்பட்ட தன் தந்தையின் உரிமைக்காக போராடுவது தான் கதை. அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான அம்சங்களுடன், அருமையான கருத்தை பேசும் சமூக அக்கறை கொண்ட படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. 
ஜேம்ஸ் கார்த்திக்  நாயகனாக நடிக்க,  இனியா , சோனியா அகர்வால்  , ஆடுகளம் நரேன் , ஆஜித் (சூப்பர் சிங்கர்) , க்ரிஷா குரூப் , சென்ட்ராயன் , ஆர்யன் , அருந்ததி நாயர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 
இப்படத்தின் படப்பிடிப்பு வேலூர், காஞ்சிபுரம், செய்யாரு கிராமப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 
படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், படக்குழுவினர் படத்தின் விரைவில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருகின்றனர். விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.  
தொழில் நுட்ப குழுவினர் விபரம் 
தயாரிப்பாளர்கள்: ஜேம்ஸ் கார்த்திக், M.நியாஸ் இயக்குநர்: துரை கே முருகன் 
ஒளிப்பதிவு : பாஸ்கர் ஆறுமுகம் 
இசை அமைப்பாளர்: அரவிந்த் ஜெரால்ட் & AK சசிதரன் 
பின்னணி இசை: ஜூபின் 
எடிட்டர்: A.ரஞ்சித் குமார் 
கலை இயக்குனர்: S.அய்யப்பன் 
பாடலாசிரியர்: சினேகன், கு.கார்த்திக் 
நடன இயக்குனர்: பாபா பாஸ்கர் சண்டைக்காட்சி : டி.ரமேஷ்