Sunday, September 8

 தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ள ஹாரர் படம்- P- 2 இருவர் “

               தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ள ஹாரர் படம்- P- 2 இருவர்

தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ள ஹாரர் படம்
” P- 2 இருவர் ”
ஆகஸ்ட் 9 ம் தேதி வெளியாகிறது.

ஆகஸ்ட் 9 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ” P-2 இருவர் “

அறம் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் P. ராமலிங்கம் தயாரித்துள்ள படம் ” P- 2 இருவர் “

கன்னடம், தெலுங்கு உட்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள பகத் விக்ராந்த் இந்த படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார்.

யாத்திசை படத்தில் நடித்த சித்து கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் இளவரசு, ராஜசிம்மன், சம்பத்ராம், தீபா, சித்தா தர்ஷன், ராட்சசன் யாசர், நாகு ரமேஷ், அஜெய், சந்தோஷ், சர்க்கார் மீனா, ஆர். ராம்குமார் மற்றும் மஸ்காரா அஸ்மிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

தேனிசை தென்றல் தேவா இசையமைத்துளார்.
ஒளிப்பதிவு – S. R. வெற்றி
பாடல்கள் – சினேகன்
எடிட்டிங் – மாதவன்
ஸ்டண்ட் – ஓம் பிரகாஷ்
நடனம் – ராதிகா, ஜான்
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – P. ராமலிங்கம்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குக்கிறார் – சிவம்.

படம் பற்றி இயக்குனர் சிவம் கூறியதாவது….

முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் நம்பிக்கை துரோகத்தை மையமாக வைத்து ஹாரர் மற்றும் திரில்லர் கலந்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

தேனிசை தென்றல் தேவா இசை அமைத்திருப்பதால் இந்த படத்திற்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது.

படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றுள்ளது படம் வருகிற 9 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்றார் இயக்குனர் சிவம்.