Sunday, September 8

நான் அரசியலுக்கு வருவதை காலம் தான் முடிவு செய்யும் – நடிகர் பிரசாந்த் 

நான் அரசியலுக்கு வருவதை காலம் தான் முடிவு செய்யும் – நடிகர் பிரசாந்த் 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடிகர் பிரசாந்த் ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பில் தலைக்கவசம் உயிர்க்கவசம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் நடிகர் பிரசாந்த் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசத்தை (ஹெல்மெட்) வழங்கி, தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

இதனை தொடர்ந்து நடிகர் பிரசாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில் “தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதனை வலியுறுத்தும் வகையிலும், வாகனங்களில் செல்லும்போது பாதுகாப்புவுடன் செல்வதை அறிவுறுத்தும் வகையிலும், அனைவரும் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்பதனை விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகம் முழுவதும் தனது ரசிகர் மன்றம் மூலமாக தலைக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது..

 

இதற்கு முன்பு பல்வேறு நல்ல விஷயங்களை ரசிகர் மன்றம் செய்து இருந்தாலும் , இது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய விஷயம் என்பதால் வெளிப்படையாக செய்து வருகிறேன். என்னை போன்ற நடிகர், பிரபலமானவர்கள் கூறும் போது மக்களிடம் எளிதாக சென்றடையும். நடிகர் விஜய்யுடன் நடிக்கும் GOAT திரைப்படம் நன்றாக போய் கொண்டு இருக்கிறது.

 

நானும் சகோதரர் விஜய்யும் நடிக்கும் திரைப்படம் மக்களிடம் எதிர்பார்ப்பு இருப்பது மட்டுமின்றி, மக்களை மகிழ்விப்பது மட்டுமின்றி திரையரங்குகளுக்கு வரும் மக்கள் சூப்பர் என்று கூற வேண்டும் என்பதற்காக இது போன்ற பிரம்மாண்டமான திரைப்படங்களை செய்து கொண்டிருக்கிறோம். தமிழில் மற்ற பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிப்பது கல்லூரி வாசல் திரைப்படத்தில் இருந்து தொடங்கிவிட்டது.

 

தற்போது நான், சகோதரர் விஜய், பிரபுதேவா எல்லோரும் இணைந்து நடிக்கின்றோம். மிகவும் சந்தோஷமாக உள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோருடைய ஒரே எண்ணம் மக்களுக்கு சூப்பரான படம் கொடுக்க வேண்டும், எல்லாமே சூப்பராக அமைந்து கொண்டிருக்கிறது.

 

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நடிகர் விஜய் கட்சி தொடங்கி இருப்பது நல்ல விஷயம். இதற்கான பதில் மக்கள் தான் சொல்வார்கள். தற்போது நான் ஒரு நடிகன் மக்களுக்கு என்னால் என்ன செய்ய முடியும் அதை செய்து கொண்டிருக்கிறேன். நான் அரசியலுக்கு வருவதை காலம்தான் முடிவு செய்யும்

 

சாதாரண மனிதனாக இருந்து மக்களுக்கு சேவை செய்யலாம்.

நடிகர் விஜய் அரசியலுக்கு அழைத்தால் வருவீர்களா? எனக் கேட்கிறீர்கள். அதற்குக் காலம் தான் பதில் சொல்லும். இப்போது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் அதற்கு மட்டும்தான் வந்துள்ளேன். நடிகர் விஷால் கட்சி ஆரம்பித்தாலும் அதுவும் நல்ல விஷயம் தான் என்றும். அரசியல் கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் தற்போது இல்லை தற்போது நான் ஒரு நடிகர் மட்டும் தான் என்றார்.

 

நடிகை திரிஷா பற்றிய விமர்சனங்கள் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நடிகை என்பதை விட அவர் முதலில் ஒரு பெண். நம்ம வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதனை உணர வேண்டும். யாராக இருந்தாலும் அப்படி பேசியது மிகவும் தவறு. தமிழகத்திற்கு இன்று ஒரு பண்பாடு உள்ளது. நாம் யாரையும் குறைத்தோ, தவறாக பேசக்கூடாது. மக்கள் நல்லது நடந்தால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள், மக்களை யாரும் ஏமாற்ற முடியாது.

 

தமிழகத்தில் சில திரையரங்குகள் முடுவதற்கு சில காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதை இடத்தில் பல திரையரங்குகள் உருவாகி வருகிறது, ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு கஷ்டங்கள் இருக்கும் அதற்கு அரசு நிச்சயமாக உதவும் என்றார்.

 

இதில் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் வன சுந்தர், நடிகர் பிரசாந்த் ரசிகர்கள் நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் மைக்கேல் அமலதாஸ், கோவில்பட்டி பிரசாந்த் நற்பணி மன்ற தலைவர் சாது கலந்து கொண்டனர்.