Sunday, September 8

பிரபு – வெற்றி – கிருஷ்ண பிரியா நடிக்கும் ஆண் மகன்

பிரபு – வெற்றி – கிருஷ்ண பிரியா நடிக்கும் ஆண் மகன்


முதன்மை கதாபாத்திரத்தில் துள்ளல் கலந்த அப்பாவாக இளைய திலகம் பிரபு நடிக்க.. 8 தோட்டாக்கள் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார் கதாநாயகியாக கேரளத்து பைங்கிளி கிருஷ்ண பிரியா அறிமுகம் ஆகிறார்
இவர்களுடன் மன்சூர் அலிகான், ஆர் வி உதயகுமார், இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், தங்கதுரை, மற்றும் பலர் நடிக்கின்றனர், கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் இளம் தயாரிப்பாளர் KM சபி மற்றும் பாரூக் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க கிராமத்து கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த குடும்பச் சித்திரமாக திரைப்படம் உருவாகிறது!

மகாகந்தன் அறிமுக இயக்குனர்

வெற்றிப்பட இயக்குனர்களான வசந்த் சாய் மற்றும் நந்தா பெரியசாமி அவர்களுடன் பணிபுரிந்த மகா கந்தன் இயக்கத்தில் கத்திரி வெயிலிலும் அதிதி புதிரியாய் தயாராகிறது!

வைரமுத்து – T ராஜேந்தர் – நவ்பல் ராஜா

ஆண்மகனின் அனைத்து பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து பட்டைதீட்ட… அடுக்குமொழி நாயகர் டி ஆர் ஒரு பாடலை பாடுவது இப்படத்தின் தனிச்சிறப்பு!
நாடி நரம்புகளை நடனம் ஆட வைக்கும் துள்ளல் இசையோடு நவ்பல் ராஜா தமிழ் திரை உலகுக்கு புதிய இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்!

கிராமப்புற காட்சிகளை கண்ணுக்கு குளுமையாக ஒளிப்பதிவாளர் ஆலிவர் டெனி படம் பிடித்துள்ளார் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம், தூத்துக்குடி, மரக்காணம், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது!விரைவில் இப்படம் திரைக்குவரவுள்ளது