Tuesday, March 18

ரஜினி கமல் அஜீத் விஜய் சிம்பு தனுஷ் ஆகியோருக்கு சண்டைக் காட்சிகளில் பின்னணி குரல் கொடுக்கும் தேவன்குமார் காலமானார்!

ரஜினி கமல் அஜீத் விஜய் சிம்பு தனுஷ் ஆகியோருக்கு சண்டைக் காட்சிகளில் பின்னணி குரல் கொடுக்கும் தேவன்குமார் காலமானார்!

சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி மெகா தொடர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பை தொடங்கியவர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி,
தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர், போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்…

கடந்த 30 ஆண்டுகளாக ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ் சிம்பு போன்ற அனைத்து முன்னணி கதாநாயகர்களுக்கும் சண்டைக் காட்சிகளில் குரல் கொடுத்தவர் … மறைந்து கேப்டன் விஜயகாந்துக்கு நன்கு பரீட்சமான நண்பர் பல படங்களுக்கு அவருக்காக சண்டைக் காட்சிகளில் குரல் கொடுத்தவர். உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணிக்கு ஏவிஎம் மயானத்தில் நடைபெறுகிறது!