ரெபல் திரை விமர்சனம்
நிகேஷ் எழுதி இயக்கி உள்ள இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார், மமிதா பைஜு, வெங்கடேஷ் விபி, ஷாலு ரஹீம், கருணாஸ், ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், சுப்ரமணிய சிவா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் பேனரில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். 1980 களின் பின்னணியில் எடுக்கப்பட்ட படம் ஆகும் . மொழி வரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது அன்றைய சென்னை ராஜதானியில் இருந்த மூணாறு கேரளா பகுதியோடு இணைக்கப்பட்டது. இதன் விளைவாக தமிழ் மாணவர்கள் பாலக்காட்டில் உள்ள சித்தூர் கல்லூரியில் கல்லூரிக் கல்வியைத் தொடர வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.
அங்கே அவர்கள் இரண்டு விரோதமான குழுக்களை KSQ மற்றும் SFY, சந்திக்க வேண்டி இருந்தது. அந்த இரண்டு குழுக்களும் அவர்களை அவமான படுத்துகிறார்கள், மற்றும் தேவையற்ற மோதல்களுக்கு உட்படுத்துகிறார்கள். கல்லூரியில் தனது தொடக்க நாளில், கதாநாயகன் கதிர், மற்றும் நண்பர்கள் இந்த அவமான படுத்ததலை எதிர்கொள்கிறார்கள் . ஓணம் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சிறியதாகத் தோன்றும் பிரச்னை பெரும் நெருக்கடியாக மாறுகிறது. இந்த சவால்களுக்கு பதிலளிக்கும் விதமாக, கல்லூரி தேர்தலில் TSP என்ற புதிய பிரிவை கதிர் உருவாக்குகிறார். இதைத்தொடர்ந்து தமிழ் மாணவர்களுக்கும் கேரளாவில் உள்ள இரண்டு குழுக்களுக்கும் சண்டை தொடங்குகிறது…
இந்த சோதனைகளுக்கு மத்தியில் கதிர் இறுதியில் தனது நோக்கங்களில் வெற்றி பெற்றாரா ……? முடிவு என்ன என்பதே கதையின் அம்சமாக உள்ளது…
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அந்தப் பகுதியில் சிறுபான்மையாக வாழும் மக்கள், பெரும்பான்மையான மக்களால் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்ற கோணத்தில் கதை தொடங்கப்படுகிறது… ஆனால் கேரளாவில் வந்து படிக்கும் மூணாறு தமிழர்களில் பெரும்பான்மையான மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களாக காட்டப்படுகிறார்கள்… தமிழ் மாணவர்களில் ஒருவர் கொல்லப்படும்போது அதற்கான காரணம் ஜாதி வன்கொடுமையின் காரணமாகவே கொல்லப்படுகிறார், தமிழர்,மலையாளி என இன வேறுபாட்டிற்கு பதிலாக, ஒடுக்கப்பட்ட மக்கள் -ஆதிக்க சாதியினர் இடையே உள்ள பிரச்சனை தான் மிக அதிகமாக காட்டப்பட்டுள்ளது, ஒரு சில இடங்களைத் தவிர. இதுவே பெரிய முரண் தான்…
இப்ப படத்தை பார்க்கும்போது மலையாளிகளை கொலைகாரர்களாக காட்டுவதற்காக எடுக்கப்பட்ட திரைப்படம் போல் மட்டுமே தெரிகிறது.. ஏற்கனவே தெலுங்கர்களுக்கு எதிராக இங்கே இனவெறி திட்டமிட்டு பரப்பப்படுகிறது… இப்போது அதைத்தொடர்ந்து மலையாளிகளுக்கு எதிராக இப்படம்….
ரெபேல் – கிளர்ச்சிக்காரன் அல்ல
இன வெறியன்……
MOVIE REVIEW BY CNN OTV TEAM