Saturday, July 27

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இயக்கி தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. அமீர் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சாந்தினி தமிழரசன், ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் உயிர் தமிழுக்கு

கதை

கதாநாயகனான அமீர் தான் காதலித்த பெண் தமிழை அடைய அரசியலில் இறங்கி கவுன்சிலராக வெற்றி பெற்று கட்சியில் மாவட்ட செயலாளர் பொறுப்பேற்று எம் எல் ஏ சீட் கிடைத்தும் மறுக்கிறார். இந்த சூழ்நிலையில் அமீர் காதலித்த தமிழின் அப்பா ஆனந்தராஜ் கொலை செய்யப்பட அந்த கொலைப்பழி அமீர்மேல் விழுகிறது. உண்மையிலேயே ஆனந்தராஜை கொலை செய்தது யார்? என்று அமீர் கண்டு பிடித்து காதலித்த தமிழை கரம் பிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

அமீர் கதாநாயகனாக நடிப்பிலும் நடனத்திலும் சண்டைக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகியாக தமிழ் கதாபாத்திரத்தில் சாந்தினி தமிழரசன் சிறப்பாக நடித்துள்ளார். மற்றும் ஆனந்தராஜ், ராஜ்கபூர். கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனைவருமேகொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தைசிறப்பாக செய்து கைதட்டல் பெறுகிறார்கள். தேவராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். வித்யாசாகரின்இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது.

நல்லொரு அரசியல் கதையை எல்லோரும் ரசித்து பார்க்கும்படி கமர்ஷியல் வெற்றி படமாக கொடுத்துள்ள இயக்குநர் ஆதம்பாவுக்கு வாழ்த்துக்கள். கதாநாயகனாகவெற்றி பெற்றிருக்கும் அமீருக்கும் வாழ்த்துக்கள்.