Sunday, September 8

BMW மோட்டராட், சென்னையில் GS எக்ஸ்பீரியன்ஸ் லெவல் 1, 2024 டிரெயினிங் புரோகிராமை தொடங்குகிறது

BMW மோட்டராட், சென்னையில் GS எக்ஸ்பீரியன்ஸ் லெவல் 1, 2024 டிரெயினிங் புரோகிராமை தொடங்குகிறது

BMW GS – ஐ ஓட்டும் த்ரில்லான அனுபவத்தை அதிகமாக்க கற்றுக்கொள்ளுங்கள். 

BMW மோட்டராட் IIA (BMW மோட்டராட் இன்டர்நேஷனல் இன்ஸ்ட்ரக்டர் அகாடமியின்) சர்ட்டிஃபைடு டிரெயினர்களால் GS மோட்டார்சைக்கிள் உரிமையாளர்களுக்கு இருநாட்கள் நிகழ்வாக வழங்கப்படும் அட்ரீனலின் – பம்ப்பிங் GS ரைடிங் அனுபவம்

#BMWMotorradIndia #BMWMotorrad #MakeLifeARide #GSExperience #Adventure #Biking #Training #Riding #GSExperienceIndia #GSExperience2024.

 

சென்னை. BMW மோட்டராட், மிக ஆவலோடு எதிர்பார்க்கப்படும் அதன் டிரெயினிங் புரோகிராம் – GS எக்ஸ்பீரியன்ஸ் லெவல் 1, 2024-ஐ சென்னையில் தொடங்குகிறது. இரண்டு நாள் பயிற்சித் திட்டம் 2024 மார்ச் 2-3 தேதிகளில் நடைபெறும்.

அதன் இயற்கையான தரைப்பரப்பிற்கு மிக நேர்த்தியாக பொருந்துகின்ற BMW மோட்டராட் – ன் மிகச்சிறப்பான GS சீரிஸ் – ன் அசாதாரணமான செயல்திறனை கண்டறிவதற்கு பைக் ரைடர்களுக்கு ஒரு நிகரற்ற வாய்ப்பை GS எக்ஸ்பீரியன்ஸ் வழங்குகிறது. இந்த பிரத்யேக, இருநாட்கள் நிகழ்வு, BMW – ன் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்களின் உரிமையாளர்களுக்கென குறிப்பாக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக டிரெயினிங் புரோகிராமை வழங்குகிறது; மிக பிரபலமான GS ரேஞ்ச் – ன் உலகத் தரம் வாய்ந்த திறன்களை கண்டறிவதற்கான உத்தரவாதத்தை இது தருகிறது.

BMW GS உரிமையாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த இருநாள் லெவல் 1 புரோகிராம், ஆஃப் – ரோடு ரைடிங்கின் அடிப்படை அம்சங்களை சரியாக கற்று தேர்ச்சி பெற ரைடர்களுக்கு உதவும். நாள் 1-ன் டிரெயினிங் புரோகிராம், BMW GS 650 cc மற்றும் அதற்கு மேற்பட்ட GS பைக்குகளின் உரிமையாளர்களுக்கானது. நாள் 2 நிகழ்வுகள், BMW 310 GS ரைடர்களுக்கானது. மோட்டார்சைக்கிள் குறித்து அடிப்படை பரிச்சயம், சரியான ரைடர் பொசிஷனை புரிந்துகொள்ளல், எண்டூரோ ஸ்டீயரிங் மற்றும் ஆஃப் – ரோடு ரைடிங், சரிவுகளில் எமர்ஜென்சி ஸ்டாப்புகள், எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் ஏற்றமான பகுதிகளில் வாகனத்தை ஓட்டுதல் போன்ற பிற பயிற்சிகள் இந்த பயிற்சி திட்டத்தில் உள்ளடங்கும். லெவல் 1 பயிற்சியினை வெற்றிகரமாக பூர்த்திசெய்த உடனேயே லெவல் 2 பயிற்சிக்கு ரைடர்கள் தானியக்கமாக தகுதி பெறுவார்கள்.

ஒவ்வொரு GS மாடலின் உயிரோட்டமான தரங்களை நிஜஉலக சூழ்நிலைகளில் GS எக்ஸ்பீரியன்ஸ் காட்சிப்படுத்தும் மற்றும் மிக அதிக பாதுகாப்பை உறுதிசெய்யும் அதே வேளையில், GS – ன் ஸ்பிரிட் – ஐ அனுபவித்து மகிழ உதவும் உத்திகளை கற்றுத்தரும் இதன் ஒவ்வொரு அமர்வும் BMW மோட்டராட் IIA (BMW மோட்டராட் இன்டர்நேஷனல் இன்ஸ்ட்ரக்டர் அகாடமி) சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளர்கள் வழங்கும் தெளிவான அறிவுறுத்தல் மற்றும் செய்முறை விளக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கும். மற்றும் GS ரேஞ்ச் மோட்டார்சைக்கிள்களில் கிடைக்கும் சிறப்பான தொழில்நுட்பங்களின் தொகுப்பின் வழியாக ரைடர்களை GS எக்ஸ்பீரியன்ஸ் அழைத்துச் செல்லும். நிபுணர்களது மேற்பார்வையின் கீழ், பிட்டுமென் மற்றும் ஆஃப் – ரோடு என்ற கலவையில் ரைடிங் அனுபவத்தை இந்த அமர்வுகள் வழங்கும்.

பதிவு மற்றும் மேலதிக விவரங்களுக்கு அருகிலுள்ள BMW மோட்டராட் டீலர்ஷிப்பை தயவுசெய்து தொடர்புகொள்ளவும்.