Tuesday, March 18

SMFG இந்தியா கிரெடிட் நிறுவனம், தமிழ்நாட்டில் CSR முன்முயற்சிகளை வலுப்படுத்துகிறது

சமூகங்கள் முழுவதும் ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துகின்ற வகையில் SMFG இந்தியா கிரெடிட் நிறுவனம், தமிழ்நாட்டில் CSR முன்முயற்சிகளை வலுப்படுத்துகிறது

சென்னை,– SMFG இந்தியா கிரெடிட் நிறுவனம் தமிழ்நாட்டில் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) மீதான தனது உறுதியான அர்பணிப்பைத் தொடர்கிறது. இது, பெண்களின் வாழ்வாதார மேம்பாடு, ஆரம்ப சுகாதார பராமரிப்பு, நிதியியல் கல்வியறிவு, விலங்கு நலன் மற்றும் சமூக ஆதரவு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகின்ற முனைப்புகள் மூலம் வாழ்க்கைகளை நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

பல ஆண்டுகளாக, இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் பல முக்கிய திட்டங்களை அறிமுகப்படுத்தி விரிவாக்கியுள்ளது. எங்களின் ஆரம்ப சுகாதார சேவைகள் திட்டமான நிர்மயா திட்டத்தின் கீழ், சேவை குறைந்த சமூகங்களுக்கு அத்தியாவசிய மருத்துவ சேவைகளை வழங்குகிற, தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்ற 3 மொபைல் ஹெல்த் வேன்களை (MHVs) நாங்கள் கொண்டுள்ளோம். இந்த திட்டத்தின் கீழ், கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 1,40,000 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ ஆதரவை நாங்கள் வழங்கியுள்ளோம்.  

நிதியியல் கல்வியறிவு என்பது SMFG இந்தியா கிரெடிட் நிறுவனத்தின் முக்கிய கவனம் செலுத்தும் ஒரு துறையாகும். சக்கி திட்டத்தின் வழியாக, பெண்களிடையே நிதியியல் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றதன் மூலம், அவர்களின் மேம்பாடு மற்றும் சமூக உள்ளடக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கின்ற வகையில் நாங்கள் பெண்களுக்கு அதிகாரமளித்துள்ளோம். இந்த முன்முயற்சியின் கீழ், கடந்த ஆண்டு மட்டும் சுமார் 20,000 பெண்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம்.

SMFG இந்தியா கிரெடிட் நிறுவனம் அதன் க்ரிஷி மித்ரா முன்முயற்சி மூலம் நிலையான விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ், கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாட்டில் 22,000 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கரிம விவசாயம், நிலையான விவசாய முறைகள் மற்றும் விவசாய சந்தைப்படுத்தல் ஆகியவை குறித்து நாங்கள் யிற்சி அளித்துள்ளோம்.

யுவா கௌஷல் முன்முயற்சியானது, கடந்த இரண்டு ஆண்டுகளில் 50 இளைஞர்களுக்கு SMFG இந்தியா கிரெடிட் உள்ளிட்ட நிறுவனங்களில் 

தொழில் வாய்ப்புகளை அணுக அவர்களுக்கு உதவுகின்ற திறன் மேம்பாடு செய்துள்ளது. இதேபோல், ஜீவிகா என்ற ஒரு வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 700 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அவர்களின் சொந்த தொழில்களை நிறுவ அவர்களை தயார்படுத்துகின்ற தையல் பயிற்சி அளித்துள்ளது.

எங்களின் முதன்மை கால்நடை பராமரிப்புத் திட்டமான பசு விகாஸ் தினம் (PVD) என்ற இந்த திட்டம், கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சுமார் 30,000 கால்நடைகளுக்கு பலனளித்துள்ளது. இந்த முன்முயற்சி, The World Records Union போன்ற குறிப்பிடத்தக்க அங்கீகாரங்களைப் பெற்றுள்ளது.

கிராமப்புற சமூகங்களுக்கான நமது உறுதிப்பாட்டை மேலும் முன்னெடுத்துச் செல்கின்ற வகையில், 1CSR1 என்ற எங்களின் பணியாளர் மையப்படுத்தப்பட்ட முன்முயற்சியானது, திறன் மேம்பாடு மற்றும் நன்கொடைகள் மூலம் தமிழ்நாட்டில் 42,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு பலனளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், பல ஆண்டுகளாக வெள்ள பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நிவாரண பொருட்களை விநியோகித்து வெள்ள நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டுள்ளோம்.

இந்த முன்முயற்சிகள் குறித்து பேசிய SMFG இந்தியா கிரெடிட் நிறுவனத்தின் சீஃப் ஆப்பரேட்டிங் ஆஃபீசர் திரு. சுவாமிநாதன் சுப்பிரமணியன் கூறுகையில்: “எங்களின் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள், மாற்றத்திற்கான உந்துவிசையாக செயல்பட்டு, கிராமப்புற வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும், ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், மற்றும் வருமான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் கவனம் செலுத்துகின்றன. நாங்கள் சேவை செய்யும் சமூகங்களின் முழுமையான நலனுக்கு பங்களிக்கின்ற வகையில் திறன் மேம்பாடு மற்றும் நிதியியல் கல்வியறிவை நாங்கள் தீவிரமாக ஊக்குவிக்கின்றோம். SMFG இந்தியா கிரெடிட் நிறுவனத்தில், புதுமையான மற்றும் நிலையான சமூக-பொருளாதார முன்முயற்சிகள் வழியாக, சேவை செய்யப்படாத சமூகங்களில் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம், எங்களின் வாடிக்கையாளர்களுடன் ஒரு வலுவான தொடர்பை ஏற்படுத்துவதற்கு நாங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளோம்.”என்று கூறினார்.

SMFG இந்தியா கிரெடிட் கோ. லிமிடெட் பற்றி (முன்பு ஃபுல்லர்டன் இந்தியா கிரெடிட் கோ. லிமிடெட்)

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் ஒரு NBFC – முதலீட்டு மற்றும் கிரெடிட் நிறுவனமாக (NBFC-ICC) பதிவு செய்யப்பட்டுள்ள SMICC ஆனது, SMFG இன் ஒரு முழுச் சொந்தமான நிறுவனமாகும். சேவை குறைந்த மற்றும் சேவை செய்யப்படாத சிறு வணிகர்கள் மற்றும் தனிநபர்களுக்கு கடன் தயாரிப்புகளை வழங்குகின்ற தனது இந்திய செயல்பாடுகளை 2007 இல் தொடங்கிய SMICC 670 க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் 70,000 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 828 கிளைகள் மற்றும் 22,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மூலம் இந்தியா முழுவதும் ஒரு முன்னிலையை நிறுவியுள்ளது. இப்படி செய்வதன் மூலம், மக்களை முறையான கடன் முறைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. SMICC இன் முதன்மை சேவைகளாக, SME களுக்கு பணி மூலதனம் மற்றும் வளர்ச்சிக்கான நிதியளிப்பு, வணிக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான கடன்கள், வீட்டு மேம்பாட்டுக் கடன்கள், சொத்துக்கு எதிரான கடன்கள், பங்குகளுக்கு எதிரான கடன்கள், தனிநபர் கடன்கள், கிராமப்புற வாழ்வாதார முன்னேற்றத்திற்கான கடன்கள் மற்றும் பல்வேறு கிராமப்புற மைக்ரோ நிறுவனங்களுக்கான கடன் ஆகியவை அடங்கும்.