எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாள்
எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாள், இந்திய வர லாற்றில் ?
எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாள், இந்திய வர லாற்றில் மறக்க இயலாத அத்தியா யம் எழுதப்பட்டது.
நம்மை ‘இந்தியப் பிரஜைகளாகிய நாம்’ ஆட்சி செய்வதற்கு வழிகோ லும், மிகுமதிப்பு வாய்ந்த இந்திய அரசியல் சாசனத்தை, ஆண்களு ம் பெண்களுமாக 299 பேர் இணை ந்து இரண்டாண்டுகள் பதினொரு மாதங்கள், பதினேழு நாட்கள் அய ராத சிந்தனையின் விளைவாக உ ருவாக்கி, அமல்படுத்திய நாள்.
அனைவருக்கும் நீதி, சமத்துவம், சுதந்திரம் என்கிற இந்திய இறை யாண்மையின் குறியீடாக, ஜனநா யக ஆட்சியின் அடிக்கல்லாக, ஒ ரு பெரும் நல்நோக்கத்தோடு இ ணைந்த இந்த தீர்க்கதரிசிகள் நம் நாட்டுக்கு அரசியல் சாசனத்தைக் கையளித்தார்கள்.
ஆயினும்கூட, நவீன இந்தியாவை நிர்மாணிக்க நம் சிற்பிகள் நமது கதியைத் தீர்மானிக்கவிருக்கும் ஆவணத்தை உருவாக்க பாராளு மன்றத்தின் மைய மண்டபத்தில் கூடியபோது...