சூர்யா மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர் ஸின் பிரம்மாண்டப் படைப்பாக
சூர்யா மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர் ஸின் பிரம்மாண்டப் படைப்பாக உ ரவாகும் ‘கருப்பு’. ஆர்.ஜே. பாலாஜி யின் பிறந்தநாளை முன்னிட்டு பட த்தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல தரமான படங் களைத் தயாரித்து, தனக்கென தனி இடத்தைப் பெற்றுள்ள பெற்ற ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்தப் பிரமாண்ட படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. இதுவரை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எடுத்துள்ள புகழ்பெற்ற படங்களின் வரிசையில் மிக அதிக பொருட் செலவில் உருவாகும் திரைப்படம் ‘கருப்பு’.
அதேபோல், சிறிய அளவிலான ஆனால் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய படங்களை இயக்கிய ஆர்.ஜே. பாலாஜி, ‘கருப்பு’ படத்தின் மூலம் பட்ஜெட், திட்டமிடல் மற்றும் மிகப்பெரிய நடிகர் பட்டாளம் என அவரும் ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார்.
சூர்யா மற்றும் த்ரிஷா இணை இருபது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜோடி சேரும் படம்...
