விவசாயம் சார்ந்த சமூகக் கருத்தைக் சொல்லும்
விவசாயம் சார்ந்த சமூகக் கருத்தைக் சொல்லும் திரைப்படம் 'உழவர் மகன்' !
விவசாயத்தின் பின்னணி கொண்ட கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் 'உழவர் மகன்'.
இப்படத்தை ப. ஐயப்பன் எழுதி இயக்கியிருக்கிறார். இது இவரது மூன்றாவது படம்.ஏற்கெனவே இவர் 'தோனி கபடி குழு' 'கட்சிக்காரன் ' ஆகிய படங்களை இயக்கியவர் .அந்த படங்களைப் போலவே இதிலும் ஒரு சமூகக் கருத்தை மக்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார்.
இந்த 'உழவர் மகன்' படத்தை சுபலட்சுமி ஃபிலிம்ஸ் சார்பாக கே. முருகன் தயாரித்துள்ளார். இணைத்தயாரிப்பு நா. ராசா.
இப்படத்தில் இன்று அதிகார வர்க்கத்தால் புறக்கணிக்கப்பட்டு இந்த அமைப்பின் மூலம் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது விவசாயம்.தொழில் உத்திரவாதம் இல்லாத விவசாயத்தில் ஈடுபட்டு விவசாயிகள் நாளும் துயரங்களையும் துன்பங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.விவசாயிகளின் சிக்கல்களைப் பற்றிப் பேசுகிறத இந்தப் படம்....
