VFX ல் மிரட்டும் ரெட் ஃபிளவர் திரைப்படம் !!
VFX ல் மிரட்டும் ரெட் ஃபிளவர் திரைப்படம் !!
தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் "ரெட் ஃபிளவர்" !!
விக்னேஷ் நடிப்பில், இறுதிக்கட்டத்தை எட்டிய "ரெட் ஃபிளவர்" திரைப்படம் !!
ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் K மாணிக்கம் தயாரிப்பில், நடிகர் விக்னேஷ் நடிப்பில், எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களத்தில், புதுமையான அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகும் "ரெட் ஃபிளவர்" திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எதிர்காலத்தை தத்ரூபமாக காட்டும் வகையில் இதன் VFX பணிகள் தற்போது உலகமெங்கும் பிரம்மாண்டமாகத் துவங்கியுள்ளது.
எதிர்காலத்தின் கற்பனைக்கெட்டாத சாத்தியங்களை, துல்லியமாகக் காட்டும், ஒரு பிரம்மாண்டமான படைப்பாக, தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத ஒரு புதுமையான படைப்பாக, இப்படம் உருவாகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ், விஜயவாடா, மும்பை, ஹைதராபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட உலகின் சில முன்னணி VFX ம...