Thursday, September 11

சிபிசிஎல் முன்னின்று நடத்தும் ‘ஸ்வாச்சதா பக்வாடா’ 2025:

சிபிசிஎல் முன்னின்று நடத்தும் ‘ஸ்வாச்சதா பக்வாடா’ 2025: h ok okசுத்தம் நம் ஒவ்வொருவரின் பொறுப்பு

சென்னை, ஜூலை 2, 2025, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (CPCL), சமூகத்தில் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 15 நாட்களுக்கு ‘ஸ்வாச்சதா பக்வாடா’ [Swachhata Pakhwada,] என்ற தூய்மை இயக்கத்தை முன்னெடுத்துள்ளது. ‘தூய்மைப் பணியில் எல்லோருக்கும் பங்குள்ளது’ [Swachhata is Everyone’s Business] என்ற கருப்பொருளை மையமாக கொண்ட இந்த இயக்கம் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்விலும் தூய்மையை ஒரு முக்கிய அங்கமாக மாற்றும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளது.

திரு.எச் ஷங்கர், நிர்வாக இயக்குனர், தனது தொடக்க உரையில் தூய்மை பக்வாடா என்பது ஒரு குறியீட்டுச் செயலை விட அதிகம் என்று வலியுறுத்தினார், இது CPCL இன் தூய்மை, நிலைத்தன்மை மற்றும் பொது சுகாதாரம், அதன் செயல்பாடுகளுக்குள்ளும் அது சேவை செய்யும் சமூகங்களிலும் அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. 2014-ல் தூய்மை பாரத் அபியான் தொடங்கப்பட்டதிலிருந்து, CPCL இந்த தேசிய நோக்கத்திற்கு ஆண்டுதோறும் அர்த்தமுள்ள பங்களிப்பை அளித்துள்ளது.

இந்த ஆண்டின் “தூய்மைப் பணியில் எல்லோருக்கும் பங்குள்ளது” என்பது, தூய்மை என்பது ஒரு முறை மட்டுமே செய்யும் முயற்சி அல்ல, அது ஒரு மனநிலை, ஒரு பழக்கம் மற்றும் தினமும் வளர்க்கப்பட வேண்டிய ஒரு கலாச்சாரம் என்ற CPCL இன் நம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தூய்மையான, பசுமையான இந்தியாவை வளர்ப்பதற்கான ஒரு நிறுவன குடிமகனாக அதன் பொறுப்பை நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியது.

சுற்றுச்சூழல் தொடர்பான பொறுப்புணர்வுக்கும், வலிமையான தலைமைப் பண்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்நிகழ்ச்சி சிபிசிஎல் நிறுவனத்தைச் சேர்ந்த கீழ்க்கண்ட உயர் அதிகாரிகளால் தொடங்கி வைக்கப்பட்டது.

திரு. எச் ஷங்கர், நிர்வாக இயக்குநர் [Mr. H Shankar, Managing Director]

திரு. ரோஹித் குமார், இயக்குநர் (நிதி) [Mr. Rohit Kumar Agrawala, Director (Finance)]

திரு. பி கண்ணன், இயக்குநர் (செயலாக்கத் துறை) [Mr. P Kannan, Director (Operations)]

2 வாரங்கள் நடக்கவுள்ள ‘ஸ்வாச்சதா பக்வாடா’ இயக்கத்தில், தூய்மையின் மதிப்பு, முக்கியத்துவத்தைப் பற்றிய கல்வி, விழிப்புணர்வை இந்நிகழ்வுகளில் பங்கேற்பவர்களுக்கு அளிக்கும் வகையில் கல்வி சார்ந்த, வேடிக்கையான பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

ஸ்டாண்ட் அப் ஷோக்கள்:
தூய்மையின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையிலான வேடிக்கை நிகழ்ச்சிகளை நகைச்சுவை கலைஞர்கள் செய்து காட்டுவார்கள். இதன்மூலம் மறக்கமுடியாத வகையில் தூய்மையின் அவசியம் பங்கேற்பாளர்களின் மனதில் பதியும்.

தெரு நாடகங்கள் மற்றும் மைம் நிகழ்ச்சிகள்:
தூய்மை மற்றும் சுற்றுச்சூழலை காக்கவேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையில் தெரு நாடகங்கள் நடத்தப்படும்.

ஓவியப் போட்டிகள்:
தூய்மையின் அவசியத்தை குறிக்கும் வகையிலும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஓவியப் போட்டிகள் நடத்தப்படும்.

தூய்மைப் பணிகள்:
ஸ்வாச்சதா பக்வாடா’ இயக்கத்தின் தன்னார்வலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட சில இடங்களை சுத்தம் செய்து, தூய்மை விஷயத்தில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக செயல்படுவார்கள்.

சுவர் ஓவியங்கள்:
ஓவியக் கலைஞர்கள் மற்றவர்களை ஈர்க்கும் சுவர் ஓவியங்களை குறிப்பிட்ட சுவர்களில் வரைந்து தூய்மை தொடர்பான செய்தியை பரப்புவார்கள்.

பட்டாம்பூச்சி தோட்டம்:
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், பல்லுயிர் பெருக்கத்தை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தோட்டங்கள் அமைக்கப்படும்.

குப்பைகளை பிரித்தெடுத்துதல் மற்றும் அதன் நிலைத்தன்மையை பற்றிய பயிலரங்குகள்:
குப்பைகளை பிரித்தெடுத்தல் மற்றும் அதன் நிலைத்தன்மை பற்றிய கல்வியை வழங்குவதில் இது கவனம் செலுத்தும்.

பெண்களுக்கான தொழில்முனைவோர் பயிலரங்கம்:
பெண்களுக்கு அதிகாரமளித்து அவர்களை வெற்றிகரமான தொழில்துறை தலைவர்களாக்கும் வகையில் கல்வி, நிலைத்தன்மை மற்றும் வங்கிக் கடன் பெறுவதற்கான முறைகள் பற்றி கல்வி வழங்கப்படும்

துணிகளை சேகரிக்கும் இயக்கம்:
பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில், மக்களிடம் உள்ள பழைய துணிகளைப் பெற்று அதை மறுசுழற்சி செய்து பைகள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து கூட்டம் நிறைந்த சந்தைப்பகுதிகளில் மக்களிடம் வழங்கப்படும்

இந்த நிகழ்ச்சிகளின் மூலம் தூய்மை என்பது எல்லோருக்குமான பொறுப்பு என்ற எண்ணத்தை பொதுமக்களிடையே பரப்புவதோடு, இதே போன்ற பணிகளை மற்றவர்களையும் பொறுப்புடன் செயல்பட ஊக்குவிக்கப்படும்.

பள்ளி மற்றும் கல்லூரிகள்:
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் சுத்தமான சுற்றுச்சூழலை பராமரிக்க வேண்டிய அவசியத்தை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

வேலைக்கு செல்பவர்கள்:
தூய்மை என்பது எல்லோருக்குமான பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் இதில் பங்கேற்பார்கள்.

சூழலியலாளர்கள்: இந்த இயக்கம் பயனுள்ளதாகவும், அறிவுபூர்வமாகவும் இருக்கும் வகையில் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் தங்கள் வழிகாட்டுதலை வழங்குவார்கள்.

டால்பின் –<

***************************************************