நாட்டின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட?
*ZEE5-ல் ‘கிஸ்’ — வரும் நவம்பர் 7 முதல் ஸ்ட்ரீமிங்!*
நாட்டின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரொமாண்டிக் தமிழ்த் திரைப்படமான ‘கிஸ்’-யை நவம்பர் 7, 2025 முதல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.
பிரபல நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் தனது அறிமுக இயக்கமாக உருவாக்கியுள்ள இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் VTV கணேஷ், ராவ் ரமேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
‘கிஸ்’ திரைப்படம் அர்ஜுன் (கவின்) எனும் திறமையான இசைக்கலைஞரின் கதையைச் சொல்கிறது. அவரிடம் ஒரு வினோதமான சக்தி உள்ளது — ஒரு ஜோடி முத்தமிடும் போதெல்லாம், அவர்கள் உறவின் எதிர்காலத்தை முன்கூட்டியே காண முடியும்!
காதலும் விதியும் மீது நம்பிக்கையற்ற அர்ஜுனின் வாழ்க்கை, மீரா (ப்ரீத்தி அஸ்ரானி) என்பவளைச் சந்தித்த ...








