மும்மொழி நடிகை ஈடன் குரியகோஸ்!
தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளில் நடிக்கும் நடிகை ஈடன் குரியகோஸ்!
மும்மொழி நடிகை ஈடன் குரியகோஸ்!
சேர நாட்டுக்கும் தமிழ்த் திரையுலகிற்கும் நீண்ட காலத் தொடர்பு உண்டு.கேரளாவில் இருந்து ஏராளமான கனவுக்கன்னிகள் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி இங்கே கோலோச்சி இருக்கிறார்கள். அந்தக் 'கேரள நாட்டிளம் பெண்கள்' வரிசை ,அந்தக்கால பத்மினி தொடங்கி இந்தக் கால லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வரையிலான தொடர்ச்சி கொண்டது.
இன்றைய காலத்திலும் கேரளாவிலிருந்து அறிமுகங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.அப்படி நடிக்க வரும் நடிகைகளில் ஒரு தனித்துவம் கொண்ட நடிகையாக ஈடன் குரிய கோஸ் உள்ளார். பணம்,புகழ் என்பவற்றை மட்டுமே குறியாகக் கொண்டு வெற்று ஆர்வத்தில் நடிக்க வராமல் தனக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு வந்துள்ளவர் இவர்.
இவர் ஊடக மேலாண்மையில் எம்.பி.ஏ படித்தவர்.இவருக்குத் தமிழ், மலையாளம் ,இந்தி ,ஆங்கில மொழ...









