
தண்ணி நல்லது.. டாஸ்மாக் நல்லதல்ல ; ஏப்ரல் 21 வெளியாகும் ‘மாவீரன் பிள்ளை’ படம் பற்றி ராதாரவி பேச்சு
தமிழகத்தில் குழந்தைப்பேறு குறைந்ததற்கு காரணம் மது தான் ; மாவீரன் பிள்ளை படம் பார்த்துவிட்டு எச்.ராஜா குற்றச்சாட்டு
மதுவிற்கு அடிமையானவர்களுக்கு சித்த மருத்துவம் வேண்டும் ; மாவீரன் பிள்ளை பட நிகழ்வில் தயாரிப்பாளர் கே.ராஜன் வேண்டுகோள்
KNR மூவிஸ் சார்பில் KNR ராஜா தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் ‘மாவீரன் பிள்ளை’. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மறைந்த வீரப் பனின் மகள் விஜயலட்சுமி சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். முக்கிய வேடத்தில் தெருக்கூத்து கலைஞராக நடிகர் ராதாரவி நடித்துள்ளார்.இந்த படம் ஏப்ரல் 21 நாளை தி ரையரங்குகளில் வெளியாகிறது.
இன்று தமிழ்நாட்டை சீரழித்துக்கொண்டு இருக்கும் மதுவின் கொடுமைகளையும், மது விற்கு எதிராக போராடி உயிர் நீத்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும், அப்படி ஒரு போராட்டாம் மீண்டும் எழுந்தால் தான் மதுவில்லா மாநிலமாக தமிழகத்தை மாற்ற முடியும் என்பது குறித்தும் விவசாயிகள் படும் துயரம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படு த் தும் விதமாக இந்தப்படம் உருவாகியுள்ளது..சமீபத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரு க்கு இந்தப்படம் திரையிட்டு காட்டப்பட்டது.
படத்தை பார்த்துவிட்டு நடிகர் ராதாரவி பேசும்போது,
அப்படி தங்கள் வசதிக்காக மதுவுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் தான் இன்று அதிக மாக மது விற்பனை காட்டாத அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்கின்றார்கள். இந்த அராஜ கமான சூழ்நிலைக்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தினால் தான் தமிழ்நாடு திருந் தும். பல வருடங்களுக்கு முன்பு நாம் இருவர் நமக்கு இருவர் என்கிற விளம்பரம் எங்கு பார் த்தாலும் காட்சியளிக்கும். ஆனால் இன்று குழந்தைப்பேறு வேண்டி மருத்துவமனையை நாடும் அளவுக்கு மதுவால் ஆண்களை ஆண்மை இல்லாதவர்கள் ஆக்கி வைத்திருக்கிறா ர்கள். இதில் மாற்றம் வர வேண்டும் என்றால் இது போன்ற படங்கள் பல எண்ணிக்கைக ளில் வரவேண்டும்” என்றார்.
குடியால் அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மையம் அமைத்து அதில் அவர்களுக்கு உயி ர் காக்கின்ற, உடம்பில் மீண்டும் புத்துணர்ச்சியை கொண்டுவரச் செய்யும் சித்தா மருந் துகளை கொடுக்க செய்ய வேண்டும். குடிக்கு எதிராக போராடி உயிரை விட்ட ஐயா சசி பெருமாளின் நினைவை போற்றும் விதமாக இந்த படத்தை இயக்குனர் ராஜா எடுத்துள் ளார். இது போன்ற படங்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவு வேண்டும்” என்று பேசினார்.
இந்து தமிழர் நல கட்சியின் தலைவர் ராம ரவிக்குமார் பேசும்போது,
அப்படி மதுரவிற்காக உயிரை விட்ட சசிபெருமாளின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொ ண்டு மதுவுக்கு எதிராக ஓங்கி குரல் கொடுத்த வைகோ திருமாவளவன் போன்றவர்கள் எல்லாம் இப்போது என்ன செய்கிறார்கள்.. மூடு டாஸ்மாக்கை மூடு என்று பாடல் எழுதிய கோவன் போன்ற சமூக போராளிகள் எங்கே போனார்கள் ? பள்ளியில் படிக்கும் மாண வன் பாஸ்மார்க் வாங்குகிறார்களோ இல்லையோ, டாஸ்மார்க் தேடிச்செல்லும் இழிநிலை இன்று தமிழகத்தில் உருவாகி இருக்கிறது. மது, மது விற்பனை இவற்றிற்கு எதி ராக மக்க ள் ஒரு புரட்சி செய்ய வேண்டும் என்கிற கருத்தை இந்த படத்தில் வலியுறு த்தியதற்கா க வும் விவசாயத்தின் அவசியம், விவசாயிகள் படக்கூடிய துயரங்கள், குடிநீரின் அவசியம் ஆகியவற்றையும் எடுத்துச் சொன்னதற்காகவும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவி த்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
இந்து மக்கள் கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் பாரத மாதா செந்தில் பேசு ம் போது,
மது மட்டுமல்லாமல் இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் பல பிரச்சனைகளையும் இந்த திரைப்படம் காட்டியுள்ளது. மேலும் விவசாயிகளின் நடைமுறை பிரச்சனைகள் அனை த் தையும் இந்த படம் காட்டியுள்ளது. இந்த படத்திற்கு கிடைக்கும் வெற்றி இந்த படக்கு ழுவி னருக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல, தமிழருக்கு கிடைத்த வெற்றியாக பார்க்க வே ண்டும்” என்று கூறினார்.





