ஜோஷினா பயிற்சிகளும் முயற்சிகளும்: நடிகை ஜோஷினா
ஜோஷினா பயிற்சிகளும் முயற்சிகளும்: நடிகை ஜோஷினா சினிமாவில் அதிர்ஷ்டத்தில் அறிமுகம் கிடைக்கலாம்; ஆனால் நின்று நிலைக்கத் திறமை தேவை என்பதில் நம்பிக்கை உள்ளவர் ஜோஷினா.
இளைய முகமாக அறிமுகமாக இருக்கும் இவர்,சினிமாவில் ஆர்வம் வந்த பிறகு அதில் நிலைத்து நிற்கும்படியான தகுதியைத் தக்க வைத்துக் கொள்ள உரிய பயிற்சிகளையும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். சினிமாவில் எந்தப் பின்புலமும் இல்லாமல் தனது முயற்சியால் கதாநாயகி வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். அப்படி இவர் தொடர்பு எல்லைக்குள் இருந்து பெற்ற வாய்ப்பு தான் 'நாட் ரீச்சபிள்' திரைப்படம்.
கடும் முயற்சிக்குப் பின் கிடைத்த இன்னொரு வாய்ப்பு தான் 'மிடில் கிளாஸ் 'படம். அடுத்து 'துச்சாதனன் ' என்கிற படம். அடுத்து வெற்றிவீரன் மகாலிங்கம் இயக்கும் புதிய படமான 'சூட்கேஸ் 'படத்திலும் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார். தன் சினிமா முயற்சிகள் பற்றி ஜோஷினா பேசும...









