"போகுமிடம் வெகு தூரமில்லை" படக்குழுவை பாராட்டிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !!
அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில், டாப் 4 இல் இடம்பிடித்த "போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படம் !!அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில், 70 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்த "போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படம் !!
Shark 9 pictures சார்பில் சிவா கிலாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாகத் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற "போகும் இடம் வெகு தூரம் இல்லை" திரைப்படம், தற்போது ப்ரைம் ஓடிடி தளத்தில் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. படத்தைப் பார்வையிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி படக்குழுவை பாராட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவின் வழக்கமான கமர்சியல் அம்சங்களிலிருந்து மாறுபட்டு,...