*‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள்
*‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –*
*காதல் உணர்வை வருடும் அழகான மெலடி ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ஆசை வரமே’ !*
முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் முதல் பாடலான “ஆசை வரமே” வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
அழகான காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்திற்காக இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா இசையில் உருவாகியுள்ள “ஆசை வரமே” பாடலை சின்மயி மற்றும் கோவிந்த் வஸந்தா இணைந்து பாடியுள்ளனர். பாடலாசிரியர் மெட்ராஷீ இப்பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார்.
“நேர நதி தீரும் வரை, நீல அலை ஓயும் வரை” என தொடங்கும் இப்பாடல், காதலின் ஆழமான உணர்வுகளை மென்மையான இசையுடன் வெளிப்படுத்துகிறது.
இளம் காதலர்களின் அன்பு, நெருக்கம், ஊடல், செல்லச் சண்டைகள் என அவர்களின் கா...
