அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா மற்றும் அனுராக் காஷ்யப்
*அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து “நிஷாஞ்சி” பட டிரெய்லரை வெளியிட்டுள்ளனர் – இந்த மசாலா என்டர்டெய்னர் திரைப்படம் செப்டம்பர் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது !!*
அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா தனது அடுத்த திரையரங்கு வெளியீடான "நிஷாஞ்சி" படத்தின் அதிரடி டிரெய்லரை வெளியிட்டது. அனுராக் காஷ்யப் (Anurag Kashyap) இயக்கியுள்ள இந்த தேசி மசாலா என்டர்டெய்னர் திரைப்படம், பெரிய திரையில் கொண்டாடும் பிரம்மாண்ட அனுபவமாக உருவாகியுள்ளது.
ஆக்சன், டிராமா, ரொமன்ஸ், காமெடி, தாயின் பாசம் என எல்லா சினிமா ரசிகர்களும் விரும்பும் அம்சங்களும் நிரம்பியுள்ள இந்த டிரெய்லரில், அறிமுக நடிகர் ஆயிஷ்வர்ய் தாக்கரே (Aaishvary Thackeray) இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். பப்லூ மற்றும் டப்லூ எனும் இரட்டை சகோதரர்களின் கதையை மையமாகக் கொண்ட இப்படம், அவர்கள் ஒரே மாதிரியாக தோன்றினாலும், அவர்...
