ஆர்வமும் ஈடுபாடும் : நேதாஜி பிரபு
ஆர்வமும் ஈடுபாடும் : நேதாஜி பிரபு
ஒரு போட்டோ ஷூட்டுக்கு ஓராண்டு உழைப்பு : வியக்க வைக்கும் நேதாஜி பிரபு!
தமிழ்த் திரையுலகில் அறிமுக கதாநாயகனாக, தயாரிப்பாளராக 'ஒளடதம்' படத்தின் மூலம் அறிமுகமானார் நேதாஜி பிரபு.மெடிக்கல் மாஃபியாக்களைப் பற்றிப் பேசியது அந்தப் படம். 'ஒளடதம்' படத்திற்குப் பிறகு தனது அடுத்த பயணத்தைத் தொடங்கியுள்ளார் நேதாஜி பிரபு.
சிறு இடைவெளிக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் மறுபிரவேசம் செய்யும் வகையில் அவர் அட்டகாசமான ஒரு போட்டோ ஷூட் எடுத்துள்ளார்.
தனது தோற்றத்திற்காக உடல் எடையைக் கூட்டி முறுக்கேற்றி,சுமார் ஓர் ஆண்டாக தாடி வளர்த்து, தனது தோற்றத்தை மாற்றியுள்ளார்.இந்த போட்டோ ஷூட்டில் எட்டு விதமான ஸ்டைல்களில் எட்டு விதமான மாறுபட்ட தோற்றங்களில் 15 மணி நேரத்தில் 30 உடைகள் மாற்றி எடுத்துள்ளார்.
இப்படிப்பட்ட தோற்ற மாற்றங்களில்
500-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் எடுத்து இத...
