இந்திய திரைத் தொழிலில் 80 ஆண்டுகால பாரம்பரியமிக்க ஏவிஎம் நிறுவனம.
*ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்*
இந்திய திரைத் தொழிலில் 80 ஆண்டுகால பாரம்பரியமிக்க ஏவிஎம் நிறுவனம.
179 திரைப்படங்கள், 55 தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஒரு வெப் தொடரை தயாரித்துள்ள எங்கள் நிறுவனம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் சிங்களம் ஆகிய ஆறு மொழிகளில் திரைப்படங்களை உருவாக்கிய பெருமையை பெற்றுள்ளது. இந்திய திரைப்படத் துறையில் பல முன்னோடி சாதனைகளையும் புதுமைகளையும் நிகழ்த்தியுள்ளோம். பின்னணிப் பாடகர் முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்திய ‘நந்தகுமார்’ (1938), இந்தியத் திரைப்பட உலகில் முதல் மொழிமாற்றுப் படமான ‘ஹரிச்சந்திரா’ (1944), உதட்டசைவுக்கு ஏற்ப பாடலைப் பொருத்தும் post lip synchronisation தொழில்நுட்பத்தை பயன்படுத்திய ‘ஸ்ரீ வள்ளி’ (1945), மகாகவி பாரதியார் பாடல்களை உரிமையாளரிடம் ஏவி. மெய்யப்பன் அவர்கள் வாங்கி திரைப் படத்தில் பயன்படுத்தியது ‘நாம் இருவர்’ (1947), அரசின் வ...
