இன்வெஸ்டிகேஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் ” ரூம் பாய்
இன்வெஸ்டிகேஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் " ரூம் பாய் " ஏப்ரல் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஏப்ரல் 17 ஆம் தேதி வெளியாகும் சஸ்பென்ஸ் - திரில்லர் படம் " ரூம் பாய் "
சென்னை அண்ணா பல்கலைக்கழக விழாவில் பங்கேற்ற " ரூம் பாய் " படக்குழுவினர்.
ACM சினிமாஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்திருக்கும் படம் " ரூம் பாய் "
C.நிகில் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அரண்மனை 4 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஹர்ஷா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
காமெடிக்கு இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், youtube புகழ் காத்து கருப்பு கலை, இன்ஸ்டா புகழ் கற்பகம் மற்றும் கவிதா விஜயன், சமீர், சிட்டி ராஜா, அருண்ராஜா, பிரபாகர்,கேரளா பெஹமின் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இவர்களுடன் மும்பை மாடல் அழகி நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமா...
