இயக்குநர் ஷங்கரின் “கேம் சேஞ்சர்” 10 ஜனவரி 2025 அன்று வெளியாகிறது !!
இயக்குநர் ஷங்கரின் "கேம் சேஞ்சர்" 10 ஜனவரி 2025 அன்று வெளியாகிறது !!
குளோபல் ஸ்டார் ராம் சரண், இயக்குநர் ஷங்கர் மற்றும் தில் ராஜுவின் "கேம் சேஞ்சர்" 10 ஜனவரி 2025 அன்று சங்கராந்தி ஸ்பெஷலாக வெளியாகிறது
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்,
குளோபல் ஸ்டார் ராம் சரண் கூட்டணியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில், தில் ராஜு தயாரிப்பில், தென்னிந்தியாவெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், கேம் சேஞ்சர் திரைப்படம், ஜனவரி 10, 2025 சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டமாக வெளியாகிறது. பட வெளியீட்டை அறிவிக்கும் விதமாக, ஒரு அசத்தலான போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்த போஸ்டரில் ராம் சரண் ஸ்டைலிஷான லுக்கில் காட்சியளிக்கிறார், அவரது தோற்றம் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தில் நேர்மைமிக்க ஐஏஎஸ் அதிகாரி ராம் நந்தன் எனும் கதாபாத்திரத்தில், இரட்டை வேடங்களில் நடித்...
