இயக்குனர் விஜய் – இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்
*இயக்குனர் விஜய் - இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியின் 'காதல் ரீசெட் ரிப்பீட்' படத்தின் முன் வெளியீட்டு விழா*
'காதல் ரீசெட் ரிப்பீட்' - நல்ல மனம் கொண்ட சாதாரண மனிதனின் கதை - இயக்குநர் விஜய்
மாலி& மான்வி மூவி மேக்கர்ஸ் ( Mali & Manvi Movie Makers) - டி ஸ்டுடியோஸ் ( D Studios) -டென்வி புரொடக்ஷன் ( Denvi Production) - ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில் முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகி, மார்ச் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'காதல் ரீசெட் ரிப்பீட்' படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காதல் ரீசெட் ரிப்பீட்' படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர் , அர்ஜுன் அசோகன், எம். எஸ். பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித...
