*இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுக்கு புதிய ஒளி*
*இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுக்கு புதிய ஒளி*
கட்டணமில்லா vvvsi.com வேலை வாய்ப்பு இணையதளத்தை மதுரையில் தொடங்கி வைத்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி*
கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மேலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும், படித்த இளைஞர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையும் எதிர்கால நிச்சயமும் விதைத்து வரும் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம், வேலைவாய்ப்பு சேவையை ஒரு சாதாரண தகவல் பரிமாற்றமாக அல்லாமல், கட்டணமில்லா மனிதநேய சமூகச் சேவையாக மாற்றி சாதனை படைத்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளாக, நேரடி நிறுவனங்களிடமிருந்து வேலைவாய்ப்பு தகவல்களைப் பெற்று, அந்த வாய்ப்புகளை நகர எல்லைகளைத் தாண்டி, கடைசி கிராமங்கள் வரை கட்டணமின்றி கொண்டு சேர்த்ததின் பயனாக, இதுவரை வேலைவாய்ப்பை அணுக முடியாத நிலையில் இருந்த முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வாழ்க்கையை மாற்றும் வேலைவாய்ப்புக...
