ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் நிரஞ்சன் சுதீந்திரா நடிக்கும் சீதா பயணம் !!
ஸ்ரீராம் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜுன் சர்ஜா இயக்கத்தில், ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் நிரஞ்சன் சுதீந்திரா நடிக்கும் சீதா பயணம் !!
ஸ்ரீராம் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில், பிரபல நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான ஆக்சன் கிங் அர்ஜுன் சர்ஜா நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இயக்குநராகக் களமிறங்குகிறார்.மனதை இலகுவாக்கும் ஒரு மென்மையான படைப்பாக உருவாகும் இப்படத்திற்கு 'சீதா பயணம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சீதை எனும் பாத்திரத்தில் வலிமை, நெகிழ்ச்சி மற்றும் கருணை ஆகியவற்றின் உருவமாக நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். இவர் தெலுங்கில் அறிமுகமாகும் முதல்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் கன்னட நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சன் சுதீந்திரா கதாநாயகனாக தமிழுக்கு அறிமுகமாகிறார்.
சீதா மிகப் புதுமையான ஆற்றல் மிகு பாத்திரம், உணர்வுரீதியாக மிக அ...
