கனவே கலையாதே திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகி
*இயக்குநர் வ.கெளதமன் இல்ல நிச்சயதார்த்த நிகழ்வு*
சென்னை - முட்டுக்காடு.
கனவே கலையாதே திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகி மகிழ்ச்சி, படையாண்ட மாவீரா திரைப்படங்களில் நாயகனாக நடித்து இயக்கிய வ.கௌதமன் தனது மகள் கௌ.பரஞ்ஜோதி பிகாம்.,எம்.பிஏ அவர்களுக்கும் கடலூர் நடுவீரப்பட்டு தொழிலதிபர் கண்ணன் அவர்களின் மகன் க.குணாநிதி பி.ஆர்க் அவர்களுக்கும் திருமண நிச்சயதார்த்த நிகழ்வு சென்னை எம்ஜிஎம் பீச் ரெசார்ட் அரங்கில் மன நெகிழ்வோடு திருமண நிச்சயதார்த்த விழா நடந்தேரியது.
விழா நிகழ்வில் மூத்த திரைக்கலைஞர் சிவக்குமார், "கவிப்பேரரசு" வைரமுத்து, நீதியரசர் கலையரசன், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன், மேனாள் அமைச்சர் ஏகே, மூர்த்தி, தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், தொழிலதிபர்கள் டெல்டா செல்வம், ராம்ஜி, ஜெயராமன் ஐ.ஏ.எஸ், சந்தானம் ஐஏஎஸ், சகாயம் ஐஏஎஸ், ஜெயகாந்தன் ஐஏ...
