கவிஞர் பூவை செங்குட்டுவன் இயற்கை எய்தினார்!*
*கவிஞர் பூவை செங்குட்டுவன் இயற்கை எய்தினார்!*
கவிஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவரான பூவை செங்குட்டுவன் சென்னையில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 90.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களையும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட சுயாதீனப் பாடல்களையும், ஐந்தாயிரத்திற்கும் மேலான பக்திப் பாடல்களையும் இவர் எழுதியுள்ளார். 1980 ஆம் ஆண்டு இவருக்கு கலைமாமணி விருது கொடுத்து கெளரவிக்கப்பட்டது. திரையிசைப் பாடல்களில் இவர் எழுதிய 'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா...' பாடலும் 'நான் உங்கள் வீட்டுப்பிள்ளை...' பாடலும் காலத்தால் அழியா புகழ் பெற்றவை. குறிப்பாக இவர் எழுதிய 'நாலும் தெரிந்தவன் நிலவுக்கே போகலாம்…’ என்ற பாடல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்த போது, இலங்கை வானொலியில் அன்றைய தினம் முழுவதும் ஒலிபரப்பப்பட்ட பாடலாகும்.
பாடல்கள் எழுதுவது மட்டுமல்லாது நாட்டிய நாடகங்கள், தொலைக்...