கெத்து தினேஷ் நடிப்பில், “கருப்பு பல்சர்”
கெத்து தினேஷ் நடிப்பில், “கருப்பு பல்சர்” திரைப்படம் ஜனவரி 30 ஆம் தேதி வெளியாகிறது !!
கெத்து தினேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் “கருப்பு பல்சர்” ஜனவரி 30 திரையில் !!
Yasho Entertainment சார்பில், Dr. சத்யா முரளி கிருஷ்ணன் தயாரிப்பில், கெத்து தினேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில், கமர்ஷியல் கொண்டாட்மாக உருவாகியுள்ள “கருப்பு பல்சர்” திரைப்படம், ஜனவரி 30
ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் வெளியீட்டைக் அறிவிக்கும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். மேலும் அவர்களோடு இணைந்து தமிழர் நன்நாள் பொங்கலை வெகு விமரிசையாக கொண்டாடினர்.
படத்தின் களமும் பொங்கலையும் ஜல்லிக்கட்டு மதுரையும் மையமாக கொண்டிருப்பதால் இந்த கொண்டாட்டம் படக்குழுவை பெரிதும் உற்சாகப்படுத்தியது.
பிரபல இயக்குநர் எம் ராஜேஷ் அவர்களிடம் உதவி இயக்குநராகவு...
