கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில்
கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான ‘அறிவு’ – உலக அரங்கில் தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்கும் திரைப்படம்!
Movietron Production தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அறிவு’ திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (57th International Film Festival of India – IFFI 2026), இந்தியன் பனோரமா ‘New Horizons’ பிரிவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், உலக அளவில் கவனம் பெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியுள்ள தமிழ் திரைப்படம் என்ற பெருமையை ‘அறிவு’ பெற்றுள்ளது.
சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், ‘கழுகு’ திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், ‘உறியடி’ விஜய்குமார் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெண் உரிமை...
