கௌதம் ராம் கார்த்திக்கின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட
கௌதம் ராம் கார்த்திக்கின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'Bloody Politics' படத்தின் டீசர் வெளியீடு!
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட அரசியல் த்ரில்லர் படத்தின் டீசர் – இயக்குநர் தினா ராகவன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படமாக 'Bloody Politics' உருவாகியுள்ளது. படத்தின் தலைப்பு அறிவிப்பு வெளியான போதே ரசிகர்கள் மத்தியில் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில், படத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டீசரை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
107 விநாடிகள் கொண்ட இந்த டீசர் படத்தின் கதைக்களம் குறித்த ஒரு பார்வையை கொடுக்கின்றது. அரசியல்வாதியாக வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் ஆக்ரோஷமான இளைஞராக கௌதம் ராம் கார்த்திக் நடித்துள்ளார். மேலும் பல்வேறு சுவாரஸ்யமான கதாபாத்திரங்களும் ...
