சத்யஜோதி பிலிம்ஸ் மாஸ் லைன்அப்… சியான் 63
*எம்ஜிஆர் முதல் சியான் விக்ரம் வரை… சத்யஜோதி பிலிம்ஸ் அடுத்த அப்டேட்!*
*சத்யஜோதி பிலிம்ஸ் மாஸ் லைன்அப்… சியான் 63 மூலம் புதிய அதிரடி!*
*தலைமுறைகளை கடக்கும் சத்யஜோதி பிலிம்ஸ்… அடுத்த ஹைலைட் சியான் 63!*
தமிழ் திரைப்பட உலகில் பல தலைமுறைகளை கடந்து வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் அடுத்த அதிரடியாக, விக்ரம் நடிக்கும் “சியான் 63” படத்தை அறிவித்துள்ளது.
வீனஸ் பிக்சர்ஸ் திரு. டி. கோவிந்தராஜன், திரைக்கதைச் சித்தர் அருளாளர் திரு. ஆர். எம். வீரப்பன் அவர்களின் சத்யா மூவிஸ் மரபையும், கலைவாணர் திரு. என். எஸ். கிருஷ்ணன், திரு. டி. ஜி. தியாகராஜன் போன்ற திரையுலக முன்னோடிகளின் 70 ஆண்டுகால திரையுலக பாரம்பரியத்தையும் தாங்கி நிற்கும் சத்யஜோதி பிலிம்ஸ், எம். ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், கேப்டன் விஜயகாந்த், அஜித் கும...
