சன் நெக்ஸ்ட் ( SUN NXT) தனது பிரத்யேக நிகழ்ச்சியான ஜாலி ஓ ஜிம்கானா
*சன் நெக்ஸ்ட் ( SUN NXT) தனது முதல் பிரத்யேக நிகழ்ச்சியான 'ஜாலி ஓ ஜிம்கானா- Jolly Oh Gymkhana ' ஏப்ரல் 30 தேதியன்று அறிமுகப்படுத்துகிறது. இது முழு குடும்பத்தினருக்கான ஒரு கலகலப்பான... வெளிப்படையான மற்றும் இயல்பான நட்சத்திர பேட்டி நிகழ்ச்சியாகும்*
சன் நெக்ஸ்ட் ( SUN NXT) தனது பிரத்யேக நிகழ்ச்சியான ஜாலி ஓ ஜிம்கானா ( Jolly Oh Gymkhana)வை ஏப்ரல் 30 ஆம் முதல் அறிமுகப்படுத்துவதன் மூலம் நட்சத்திரங்களை மையமாகக் கொண்ட தனது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த தயாராக உள்ளது. இது சாதாரண ஒரு பேட்டி நிகழ்ச்சி மட்டுமல்ல. உங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களை அவர்களின் மிகவும் இயல்பான மற்றும் தன்னிச்சையான தருணங்களில்.. முன் தயாரிப்பு ஏதுமின்றி உண்மையான மனிதர்களாக பார்க்கும் ஒரு அரிய வாய்ப்பாகும். இதில் கலகலப்பான விளையாட்டுகள், சுவராசியமான செயல்பாடுகள் மற்றும் வேடிக்கையான கேலி பேச...
