சிக்மா’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!
*'சிக்மா' திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!*
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது.
ஹெட் ஆஃப் லைகா புரொடக்ஷன்ஸ் தமிழ் குமரன், "'சிக்மா' திரைப்படம் இயக்குநர் சஞ்சய்க்கு மட்டுமல்ல எங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கும் மிக முக்கியமான படம். நாங்கள் தயாரித்த முதல் படம் 'கத்தி'. இப்போது ஜேசன் சஞ்சய் எங்கள் தயாரிப்பில் அறிமுகமாகிறார் என்பது பெருமையாக உள்ளது. சஞ்சய் மேக்கிங்கில் மிரட்டி இருக்கிறார். படம் நன்றாக வந்து இருக்கிறது. 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தில் இயக்குநர் நெல்சனையும், 'டான்' திரைப்படத்தில் சிபி சக்கரவர்த்தியும் அறிமுகப்...
