தநைரா கைத்தறி தினத்தை முற்றிலும் மேம்படுத்தப்பட்ட காதி புடவைகளுடன் கொண்டாட அழைக்கிறது!
தநைரா கைத்தறி தினத்தை முற்றிலும் மேம்படுத்தப்பட்ட காதி புடவைகளுடன் கொண்டாட அழைக்கிறது!
* அழகிய இயற்கை மற்றும் நினைவுகளைத் தூண்டும் ரெட்ரோ-இம்ப்ரெஷனிசத்தால் [Retro-Impressionism] ஈர்க்கப்பட்டு, கையால் பிரத்தியேகமாக நெய்யப்பட்ட காதி புடவைகளில் புத்துணர்வுடன் கூடிய மகிழ்ச்சியைக் கொண்டாட அழைக்கிறது தநைரா.
சென்னை 8 ஆகஸ்ட், 2024: பாரம்பரியம் மற்றும் சமகால பாணி இவை இரண்டையும் அழகியலுடன் கூடிய பொருத்தமான கலவையில் ஒருங்கிணைத்து, டாடா குழுமத்தின் தயாரிப்பாக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் தநைரா [Taneira], தேசிய கைத்தறி தினத்தை [National Handloom Day] கொண்டாடும் வகையில் தனது காதி புடவை தொகுப்பை பெருமையுடன் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் பண்டைய கால பாரம்பரியங்களிலிருந்து உருவாகி மூடுப்பனியைப் போல் எங்கும் இருக்கும் வகையில் முக்கியத்துவம் பெற்றிருக்கும் காதி பல நூற்றாண்டுகள் மற்றும்...
