தனிஷ்க் மற்றும் டி பியர்ஸ், இந்தியாவின் இயற்கை வைர நகைச் சந்தையை ஊக்கப்படுத்த செயல்பாட்டு யுக்தி
தனிஷ்க் மற்றும் டி பியர்ஸ், இந்தியாவின் இயற்கை வைர நகைச் சந்தையை ஊக்கப்படுத்த செயல்பாட்டு யுக்தி அடிப்படையில் இணைந்து செயல்பட முடிவு!
* இந்தியா இயற்கை வைர நகைகளுக்கான உலகின் இரண்டாவது பெரிய சந்தையாக உருவெடுத்து வரும் நிலையில், வைர நகைத் தொழில்துறையில் முன்னணி வகிக்கும் டி பியர்ஸ் மற்றும் தனிஷ்க் வைரத்தின் மீதான அழிவில்லாத மதிப்பை இன்னும் ஏராளமான மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் இணைந்து செயல்பட இருக்கின்றன.
உலகின் முன்னணி வைர நிறுவனமான டி பியர்ஸ் குழுமம் [De Beers Group] மற்றும் டாடா குழுமத்தைச் சேர்ந்ததும் இந்தியாவின் மிகப்பெரிய நகை விற்பனை பிராண்டாகவும் திகழும் தனிஷ்க் [De Beers Group] ஆகிய இரு நிறுவனங்களும் செயல்பாட்டு யுக்திரீதியாக இணைந்து செயல்பட இருப்பதாக அறிவித்திருக்கின்றன. மிக அரிதாக கிடைக்கும் இயற்கை வைரங்களின் உயரிய தரம் மற்றும் விலைமதிப்பற்ற தன்மை ஆகியவற்றை இன்னும் ஏராளம...
