தமிழர்களும், மலையாளிகளு ம் ஒரு தாய் மக்கள்தான்
தமிழர்களும், மலையாளிகளும் ஒரு தாய் மக்கள்தான் என்று பேசும் வீரவணக்கம் திரைப்படம்.*
விரைவில் வெளியாகயுள்ள வீரவணக்கம் திரைப்படம் இப்பொழுதே மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் திரையரங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வீரவணக்கம் திரைப்படம் வெளியீட்டிற்கு முன்னதாக படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் இடம்பெறும் ஒரு போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. விசாரத் கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் பிரபல மலையாள இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கியுள்ள முதல் தமிழ் படம் இது. சமுத்திரக்கனியும் பரத்தும் முதன்முறையாக இணைந்து நடிக்கும் இந்த படத்தில் பிரபலங்கள் மற்றும் புதுமுகங்கள் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழர்களும் மலையாளிகளும் ஒருதாய் மக்கள் என்ற மிக முக்கியமான செய்தி இந்த படத்தை தனித்துவமாக்குகிறது.
ஒடுக்கப்பட்ட மற்றும் பட...
