தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு பெருமை !*
*ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘காளிதாஸ் 2’ - தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு பெருமை !*
*ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவில் முத்திரை பதித்த ‘காளிதாஸ் 2’…*
தமிழ் சினிமாவின் தரமான திரில்லர் படைப்புகளில் ஒன்றாகப் பாராட்டப்பட்ட ‘காளிதாஸ்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான ‘காளிதாஸ் 2’, தற்போது சர்வதேச அளவில் மேலும் ஒரு முக்கிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவாக கருதப்படும் 28-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா (Shanghai International Film Festival - SIFF 2026)-வில் திரையிடப்பட்ட ஏழு இந்திய திரைப்படங்களில் ஒன்றாக ‘காளிதாஸ் 2’ தேர்வாகியுள்ளது.
சீனாவின் ஷாங்காயில் ஜூன் 12 முதல் 21 வரை நடைபெற்ற இந்த திரைப்பட விழாவின் சிறப்பு திரையிடல்கள் ஜூன் 28 வரை நகரின் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றன. உலகம் முழுவதிலிருந்தும் திரைப்பட இயக்குநர்கள்,...
