தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. வினையும்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. வினையும் எதிர்வினையும் பற்றி வெளிப்படுத்தும் படம் 'அறுவடை'
'லாரா' புகழ் கார்த்திகேசன் நடித்து தயாரித்து இயக்கும் படம் 'அறுவடை'
ஆன்மீகம் தத்துவங்களின்படி கர்மா என்பது பேசப்படுகிறது. அதன்படி ,'நீங்கள் வெளிப்படுத்தும் எண்ணங்கள் அல்லது ஆற்றல் எதுவாக இருந்தாலும் அது நல்லதாகவோ கெட்டதாகவோ உங்களுக்கே திரும்பக் கிடைக்கும்' என்கிறது.சுருக்கமாக 'விதைத்ததையே அறுப்பாய்' என்கிறது.
அறிவியல் ரீதியாகப் பார்க்கும்போது நியூட்டனின் மூன்றாவது விதி இது பற்றிக் கூறும்போது, 'ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர்வினை உண்டு' என்று கூறுகிறது.
ஒவ்வொரு செயலுக்கும் உள்ள எதிர்வினை பற்றித் தான் 'அறுவடை' படம் பேசுகிறது.
'வினை விதைத்தவன் வினை அறுப்பான் 'என்கிற கருத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் படம்தான் 'அறுவடை'.ஆக அறுவடை என்கிற இந்தப் படத்திற்குத் தலைப்பாக வந்திருக்கி...
