தயாரிப்பாளர் ராஜு ஷெரேகர் வழங்கும் ‘VOWELS – An Atlas of Love’
*தயாரிப்பாளர் ராஜு ஷெரேகர் வழங்கும் ‘VOWELS – An Atlas of Love’ திரைப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது!*
இதுவரை நாம் உணர்ந்திடாத ஆழமான, ஐந்து காதல் கதைகள் ரசிகர்களை மெய்மறக்க செய்ய வருகிறது. உயிரில் இருந்தும், உணர்வில் இருந்தும், சுவாசத்தில் இருந்தும் பிறப்பதுதான் காதல்! அதுதான் ’Vowels’.
‘VOWELS – An Atlas of Love’ திரைப்படம் காதலின் பல பரிமாணங்களை பேசும் தனித்துவமான திரைப்படமாக உருவாகியுள்ளது. கற்பனையிலிருந்து குற்றம் வரை, காதலில் இருந்து ஆசை வரை, உணர்வுகளில் இருந்து அதற்கு அடிபணிவது வரை என இனிமை-ஆபத்து, தியாகம்-கொடூரம், மாயை-இருள் ஆகிய காதலின் இருபக்கங்களை இந்த திரைப்படம் பேசும்.
திரைப்படத்தின் டைட்டில் லுக் இன்று (ஜனவரி 26, 2026) வெளியிடப்பட்டுள்ளது. ஒலி, ஓசை, உணர்வு ஆகியவற்றின் மூலம் வார்த்தைகளுக்கு உயிரூட்டும் உயிரெழுத்துகளே மொழியின் அடிநாதம். அத...
