தாய் கிழவி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!*
*‘தாய் கிழவி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!*
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் கலை, “நல்ல கதைகள் தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இயங்கி வருகிறது. இது எங்கள் தயாரிப்பில் ஒன்பதாவது படம். இந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் கதை மீது சிவகார்த்திகேயன் வைத்த நம்பிக்கையில் இருந்துதான் படம் தொடங்கியது. பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கிறோம். படத்தின் ரஃப் கட் பார்த்துவிட்டு எங்கள் அணியை சிவா பாராட்டினார். சிவகுமார் எவ்வளவு திறமையான இயக்குநர் என்பது இந்தப் படத்தின் மூலமும், அவருக்கு அடுத்து கிடைத்திருக்...
