*‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!*
*‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!*
V6 Film Pvt Ltd சார்பில் தயாரிப்பாளர் வேலாயுதம் தயாரிப்பில், வெற்றிச்செழியன் இயக்கத்தில், மாறுபட்ட சமூக அக்கறை கொண்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘தி கிராண்ட் மாஸ்டர்’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.
முன்னணி இயக்குநர்களான ஹெச். வினோத், சீனு ராமசாமி மற்றும் ஜனநாதன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெற்றிச்செழியன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். தனது முதல் படத்திலேயே சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் கனவுகளுக்கான போராட்டத்தையும் அழுத்தமாகப் பேசும் படைப்பை உருவாக்கியுள்ளார்.
தூய்மை பணியாளராக வாழ்வாதாரத்திற்காக போராடும் ஒரு தாய், தனது மகன் செஸ் விளையாட்டில் சாதித்து கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்ற கனவுக்காக துணை நிற...
